16 ஆண்டுகளுக்குப் பிறகு….?! பழம் நீயப்பா…ஞானப்பழம் நீயப்பா…! தமிழ் ஞானப்பழம் நீயப்பா…!!!

பழனி என்றாலே நம் நினைவுக்கு வருவது பஞ்சாமிர்தம் தான். அங்கு போய் வரும் பக்தர்கள் மறக்காமல் இதை வாங்கி வருவதுண்டு. தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் இங்கு நடைபெறும் பிரசித்திப் பெற்ற திருவிழாக்கள்.

தலவரலாறு

பெற்றோர் வைத்த ஞானப்பழம் போட்டியில் முருகர் ஏமாந்தார். விநாயகர் அம்மை அப்பனே உலகம் என சுற்றிவந்து ஞானப்பழத்தைப் பரிசாகப் பெற்றுக்கொண்டார். ஏமாந்த முருகரோ அனைத்தையும் துறந்து பழனி மலையில் போய் கோவணத்துடன் ஆண்டியாக நின்றார். அவர் நின்ற இடமே பழம் நீ என்று அழைக்கப்பட்டு அது மருவி பழனி ஆனது.

Palani malai
Palani malai

போகர் சித்தர் தான் நவபாஷானம் கொண்டு இங்குள்ள முருகருக்கு சிலை அமைத்தார்.

கும்பாபிஷேகம்

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 27ஆம் தேதி (நாளை) நடைபெறுகிறது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் கடவுள் முருகனின் மூன்றாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது பழனி முருகன் கோவில்.

ஜீவசமாதிகள்

போகர் சித்தர் உருவாக்கிய நவபாஷான மூலவர் சிலையான தண்டாயுதபாணியை வணங்கினால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. இதன் காரணமாகவே லட்சக்கணக்கான பக்தர்கள் பாதையாத்திரையாக வந்து தண்டாயுதபாணியை வணங்கிச் செல்கின்றனர்.

Lord Muruga
Lord Muruga

பழனியில் போகர் சித்தர், புலிப்பாணி சித்தர் ஜீவசமாதிகளும் உள்ளதால் ஏராளமானோர் முருகனை வழிபட்டதோடு ஜீவ சமாதிகளையும் வழிபட்டு செல்கின்றனர்.

தைப்பூச திருவிழா, பங்குனி உத்திரம் என பிரசித்தி பெற்ற விழாக்கள் பழனியில் நடைபெறும்.

கும்பாபிஷேகம் நேரம்

Koil Painting work
Koil Painting work

ஜனவரி 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பழனி மலைக் கோவில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு ஜனவரி 26ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும்.
23ஆம் தேதி மாலையில் முதற்கால யாகம் தொடங்கியது. பின்னர் பழனி பாதவிநாயகர் கோவில் முதல் இரட்டை விநாயகர் கோவில் வரை உள்ள அனைத்து பரிவார சன்னதிகளிலும் 26ஆம் தேதி (இன்று) காலை 9.50 மணியில் இருந்து 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

palani Murugan
palani Murugan

அதைத்தொடர்ந்து ஜனவரி 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை சஷ்டி திதி, ரேவதி நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய காலை 8.30 மணியில் இருந்து 9.30 மணிக்குள் பழனி முருகன் கோவில் ராஜகோபுரம், தங்ககோபுரத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

அமைவிடம்

தமிழகத்தில் மதுரையில் இருந்து 115 கிலோ மீட்டர் தொலைவில் பழனி உள்ளது.

 2 பாதைகள்

பழனி மலை உச்சியை அடைய 2 வகையான பாதைகள் உள்ளன. ஒன்று யானை பாதை. எளிமையான பாதையாக இருப்பதால் இதை ஏறுவதற்குப் பயன்படுத்தலாம். மற்றொன்று நேர் பாதை. இதை இறங்குவதற்குப் பயன்படுத்தலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews