ஒரே போட்டியில் 1768 ரன்கள் குவிப்பு: டெஸ்ட் போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனை!

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் 1768 ரன்கள் குவித்து டெஸ்ட் வரலாற்றில் பெரும் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 657 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 274 ரன்கள் எடுத்தன.

pakistan won

அதேபோல் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 579 ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் 268 ரன்கள் எடுத்தன. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்த போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் 1768 ரன்ககுவித்துள்ளது/ இதற்குமுன் நேரம் 1939ஆம் ஆண்டு 1981 ரன்களும், 1930ஆம் ஆண்டில் 1815 ரன்களும் அடிக்கப்பட்டாலும் இந்த இரு போட்டிகள் டிராவில் முடிந்தன.

முடிவு தெரிந்த டெஸ்ட் போட்டியில் அதிக ரன் குவித்த போட்டி இதுதான் என்ற சாதனை நேற்று முடிந்த டெஸ்ட் போட்டியில் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.