முறுமுறுவன ஹோட்டல் சுவையில் வெங்காய ரவா தோசை வீட்டிலே செய்வது எப்படி?

நாம் ஹோட்டல்களில் விரும்பி கேட்கும் உணவுகளில் ஒன்று ரவா தோசை, அந்த தோசையை வீட்டிலே செய்து பார்க்கலாமா…

தேவையான பொருட்கள் :

தோசை மாவு – 1 கப்
ரவை – 2 கப்
மைதா – அரை கப்
வெங்காயம் – 2
மிளகாய் – 4
சிரகம் – சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது- 1 தேக்கரண்டி
உப்பு – சுவசிக்கு ஏற்ப
தயிர் – 1 கப்
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் தோசை மாவு ,ரவை, மைதா மாவு, சீரகம், உப்பு, தயிர் ,பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி விழுது, சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.

கிராமத்து ஸ்டையில் கார சாரமான பருப்பு உருண்டைக் குழம்பு!

மாவினை தண்ணியாக கலந்து கொள்ளவும் பின், தோசை கல்லில் ஊற்றி மேலே வெங்காயம் பரவலாக தூவி, எண்ணெய் சுற்றி ஊற்றி, தோசை திருப்பிப் போடாமல், வெந்ததும் எடுக்கவும்.

ஹோட்டல் சுவையில் முறுமுறுவன ரவா தோசை தயார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews