பாம்பு நடனம்னா இவர் தான் பேமஸ்.. எம்ஜிஆர் படத்தை தவறவிட்ட வருத்தம்.. யார் இந்த குமாரி கமலா..?

பாம்பு நடனத்தால் புகழ்பெற்றவர் தான் பழம்பெரும் நடிகை குமாரி கமலா. கலைமீது இவருக்கு இருந்த ஆர்வம் இவரை மூன்று வயதிலேயே நாட்டியம் திசையில் இழுத்து சென்றது. தனது மூன்றரை வயதிலேயே நடன மேதை ருக்மணியிடம் பாராட்டைப் பெற்றார்.

தனது சிறு வயதிலேயே மாத சம்பளத்திற்கு பம்பாயில் இருந்த ரஞ்சித் மூவிடோன் நிறுவனம் ஒன்றில் நடிகையாக சேர்ந்த குமாரி கமலா பல்வேறு முக்கிய விழாக்களில் நடனமாடி உள்ளார். இரண்டாம் உலகப் போர் காரணமாக குமாரி கமலாவின் குடும்பத்தினர் சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு குடி பெயர்ந்தனர்.

வெளில சொன்னா அசிங்கமா போயிடும்… நடிப்புக்காக கே.எஸ்.ரவிகுமாரிடம் கெஞ்சிய படையப்பா பட நடிகை…

அங்கு காட்டுமன்னார்கோயில் முத்துக்குமார பிள்ளை என்பவரிடம் முறையாக பரதத்தை பயின்று மாயவரத்தில் அரங்கேற்றம் செய்தார். தமிழில் 1944 ஆம் ஆண்டு வெளிவந்த ஜகதல பிரதாபன் படத்தில் இவர் ஆடிய பாம்பு நடனம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அதன் பிறகு குமாரி கமலாவிற்கு பல திரைப்படங்களில் நடனமாடும் வாய்ப்பு கிடைத்தது. பாம்பு நடனத்தின் மூலமாகத்தான் புகழின் உச்சிக்கு குமாரி கமலா சென்றார். அதேபோன்று 1947 ஆம் ஆண்டு வெளியான நாம் இருவர் படத்தில் ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்ற பாடலில் இரட்டை வேடத்தில் நடனமாடி அசத்தியிருப்பார் குமாரி கமலா.

80c4fd2382a75b7f446dafdd23b24e3f scaled

அந்த காலத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பது என்பது கடினமானதாக இருந்தாலும் அதையும் அவர் கனகச்சிதமாக செய்திருப்பார். இன்றும் ரசிகர்கள் கொண்டாடும் சிவாஜி கணேசன் படம் பராசக்தியில் இடம் பெற்ற ஓ ரசிக்கும் சீமானே பாடலுக்கு நடனம் ஆடியவர் குமாரி கமலா தான்.

எந்தக் கதாபாத்திரமானாலும் சரி… பட்டையைக் கிளப்பி விடுவதில் நடிகைகளில் இவரை மிஞ்ச ஆள் இல்லை..!

அதேபோன்று 1959 ஆம் ஆண்டு வெளியான சிவகங்கை சீமை திரைப்படத்தில் எஸ் எஸ் ராஜேந்திரன் அவர்களுக்கு ஜோடியாக குமாரி கமலா நடித்திருப்பார். இந்த படத்தில் ஏராளமான நடனங்கள் இடம் பெற்று இருக்கும். ஒவ்வொரு நடனத்திலும் குமாரி கமலா தனது திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.

இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்திற்கு போட்டி படமாக இந்த படம் எடுத்துக் கொள்ளப்பட்டதால் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றிருந்தால் குமாரி கமலா மிக பிரபலமாக பேசப்பட்டிருப்பார். குமாரி கமலாவுக்கு குறிப்பிட தாக்க படம் என்றால் 1962-ல் வெளியான கொஞ்சம் சலங்கையை கூறலாம் இந்த படத்தில் குமாரி கமலா நாட்டிய நங்கையாக நடித்திருந்தார்.

sudharani arang 1 455x455 1

இதில் போட்டி நடனம் ஒன்று இடம் பெற்று இருக்கும் குமாரி கமலா ஒருபுறம் குசலகுமாரி மறுபுறம் என இருவரும் போட்டியிட்டு ஆடிய அந்த போட்டி நடனத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

ஒரு படத்தில் நடிக்காததற்கு குமாரி கமலா மிகவும் வருத்தப்பட்டார் என்றால் அதுதான் எம்ஜிஆரின் நாடோடி மன்னன். இந்த படத்தில் நடிக்க குமாரி கமலாவுக்கு அழைப்பு வந்தது. ஆனால் அப்போதைய சூழலால் அவரால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பின்னாளில் இது பற்றி அவர் பலமுறை கவலைப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என ஏறக்குறைய 100 படங்களுக்கு மேல் நடித்த குமாரி கமலா ஒரு கட்டத்தில் பல்வேறு சூழ்நிலை காரணமாக அமெரிக்காவிற்கு சென்று விட்டார்.

தமிழில் ஒரே படம்.. அதுவும் மணிரத்னம் படம்.. அதன் பிறகு திரையுலகை விட்டு காணாமல் போன நடிகை..!

அங்கு நாட்டிய பள்ளி ஒன்று தொடங்கி பல கலைஞர்களை உருவாக்க தொடங்கினார். இந்திய அரசு இவரது கலைத்திறமையை பாராட்டும் விதமாக 1970 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கி சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...