சிறப்பு கட்டுரைகள்

ஐயோ கடவுளோ தொல்லை தாங்க முடியல என ஆசிரியரை படாத பாடு படுத்தும் சுட்டி குழந்தை!

பொதுவாக குழந்தைகள் என்றாலே அவர்களது மழலை பேச்சு தான் சிறப்பு . கள்ளம் கபடம் இல்லாத அந்த பேச்சுயில் அனைவரும் மயங்குவது உண்மைதான். குழந்தைகள் பேச துடங்கும் காலத்தில் தான் அந்த மழலை பேச்சு வரும்.

மழலை பேச்சில் நாம் இலக்கணங்களை பார்க்க முடியாது, நாமும் சிறு வயதாக இருக்கும் போது அப்படிதான் இருந்திருப்போம். காலங்கள் அவர்களது கணக்கில் இருக்காது. நேத்து வந்தோம் , நாளைக்கு சாப்பிட்டோம் என அவர்களது சுட்டி தனத்தை அடக்கிக்கொண்டே போகலாம்.

குழந்தை பருவத்தில் தான் வேண்டும் என அடம் பிடிக்கும் குணமும் அதிகமாக இருக்கும், மேலும் தனக்கு மட்டும் தான் என்ற பொறாமையும் தன் மனதிற்கு பிடித்தவருக்கு மட்டும் கொடுக்கும் அன்பான பாசமான குணமும் இருக்கும்.

உண்மையை சொன்னால் மனித பிறவியில் நாம் நம்மை மறந்து மகிழ்ச்சியாக இருக்கும் பருவம் குழந்தை பருவம் தான். அந்த பருவத்தில் நாம் பண்ணும் சுட்டி தனத்திற்கு அளவே இல்லை . அது ரசிக்கும் படியாக இருந்தாலும் சில நேரம் சிரிப்பாகவும் வரும்.

அந்த வகையில் தொடக்க பள்ளி செல்லும் மாணவன் ஒருவன் ஆசிரியரை படாதா பாடு படுத்தும் வீடியோ தற்போழுது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் மாணவன் தமிழின் முதல் எழுத்தான அ எழுத அது சரி இல்லை என ஆசிரியர் கூறியுள்ளார். அதற்க்கு அந்த குட்டி குழந்தை ஐயோ கடவுளோ தொல்லை தாங்க முடியல என ஆசிரியரை பார்த்து கூறி இது அ தான் என கூறியுள்ளான்.

இனி மெட்ரோ ரயிலில் மெல்லிசை.. பயணிகளுக்கு கொண்டாட்டம்!

அதற்கு ஆசிரியர் தான் எழுதிய அ இப்படியில்லை அதுபோல எழுத சொல்ல அதற்கு சுட்டி குழந்தை முடியாது தான் எழுதியது தான் அ . அது தான் சரி என வாக்கு வாதம் செய்ய அதை பார்க்க நமக்கு சிரிப்பு தான் வருகிறது .

கடைசி வரை அவன் தவறை ஒப்பி கொள்ள வில்லை. நான் எழுதிய அ எனக்கு பிடித்திருக்கிறது என கூறி வாக்கு வாதத்தை தொடர்ந்தான். உனக்கு பிடித்த அ போட கூடாது புத்தகத்தில் உள்ள அ தான் போட வேண்டும் என ஆசிரியர் கூற நமக்கு சிரிப்பாக வருகிறது.

 

 

 

 

Published by
Velmurugan

Recent Posts