இனி மெட்ரோ ரயிலில் மெல்லிசை.. பயணிகளுக்கு கொண்டாட்டம்!

சென்னை மெட்ரோ ரயிலில் மெல்லிசை இசைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பயணிகளுக்கு பெரும் கொண்டாட்டமாக உள்ளது.
மெட்ரோ ரயில் என்பது சென்னை மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக உள்ளது என்பதும் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு எந்த விதமான ட்ராபிக் பிரச்சனையும் இல்லாமல் சென்றுவிடக் கூடிய வசதி மெட்ரோ ரயிலால் சென்னை மக்களுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மெட்ரோ ரயிலை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு பாதைகளுக்கு மெட்ரோ ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த மெட்ரோ ரயில்களை இயக்க பட்டுவிட்டால் சென்னையின் எந்த பகுதியிலிருந்தும் எந்த பகுதிக்கும் வெகு எளிதில் போய்விடும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னையில் வரும் 17, 18 ஆகிய இரு தினங்களில் மெட்ரோ ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை கலைநிகழ்ச்சிகள் வாயிலாக உணர்த்த ’ஆன் தி ஸ்ட்ரீட் ஆஃப் சென்னை’ என்ற இசை குழுவுடன் இணைந்து ஒரு மாறுபட்ட ஏற்பாட்டை சென்னை மெட்ரோ ரயில் நிலையம் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் இந்த ஏற்பாட்டுக்கு பயணிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.