ஒரே ஒரு முத்தத்தால் உயிருக்கே போராடும் இளம்பெண்.. முத்தக்காய்ச்சல் குறித்த அதிர்ச்சி தகவல்..!

22 வயது இளம்பெண் ஒருவர் மதுபான கூடம் ஒன்றில் இளைஞர் ஒருவருக்கு ஒரே ஒரு முத்தம் கொடுத்ததால் முத்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தற்போது உயிருக்கே போராடி வருவதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக முத்த காய்ச்சல் பரவி வருவதாகவும் முத்தம் கொடுப்பதால் வாய் எச்சிலில் இருந்து பர்வு வைரஸ் காரணமாக இந்த காய்ச்சல் ஏற்படுவதாகவும், ஆரம்பத்திலேயே இதை கவனிக்காமல் விட்டால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

உதட்டுடன் உதடு முத்தம் கொடுப்பதால் எச்சில் மூலம் ஒரு சில வைரஸ்கள் பரவுவதாகவும் அந்த வைரஸ் தொண்டை வறட்சி, தலைவலி, உடல் சோர்வு ஆகியவற்றை ஏற்படுத்தி அதன் பின் உடல் நலனை பாதிக்கும் அளவுக்கு செய்து விடுவதாகவும் கூறப்படுகிறது.

முத்த காய்ச்சல் குறித்த அறிகுறி முதல் 6 வாரங்களுக்கு தெரியாது என்பதால் இந்த நோயின் தீவிரம் கூட நோயாளிகள் தெரியாமலே இருக்கிறார்கள் என்றும் அதன் பின்னர் முத்தக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதும் அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அளவுக்கு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரிட்டனை சேர்ந்த மேவே மெக்ராவி என்ற 22 வயது இளம்பெண் சமீபத்தில் மதுபான கூடம் ஒன்றில் தான் சந்தித்த இளைஞருக்கு முத்தமிட்ட நிலையில் அவருக்கு தொண்டை வலி, தொண்டை வறட்சி, தலைவலி உள்ளிட்டவை ஏற்பட்ட நிலையில் அதன் பிறகு வாந்தி, தீவிரக் காய்ச்சல் ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது தான் அவருக்கு முத்தக் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து மெக்ராவி தனது இன்ஸ்டாவில் கூறிய போது கடந்த சில நாட்களுக்கு முன் எனக்கு கடுமையான தலைவலி மற்றும் உடல் உபாதை ஏற்பட்ட நிலையில் என்னால் எழுந்து கூட நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து நான் மருத்துவமனையில் சென்ற பின்னர் தான் தற்போது ஓரளவு குணமாகி வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குணமாக சில மாதங்கள் ஆகலாம் என்றும்  அதுமட்டுமின்றி இந்த காய்ச்சலின் தீவிரம் தெரியாமல் இருப்பதால் அவர்களிடமிருந்து வேறு சிலருக்கும் இந்த காய்ச்சல் பரவலாம் என்றும் உரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் மூளை, கல்லீரல், நுரையீரல் ஆகியவற்றை பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.