கும்பம் புத்தாண்டு ராசி பலன் 2024!

Kumbam Puthandu Rasi Palan 2024: கும்ப ராசி அன்பர்களே! 2024 ஆம் ஆண்டினைப் பொறுத்தவரை சனி பகவான் பெரிதாக எந்தவொரு இடப் பெயர்ச்சியினையும் செய்யவில்லை; வக்ரம் மட்டும் அடைகிறார்.

2024 ஆம் ஆண்டின் பாதியில் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்கிறார். ராகு- கேது எந்தவொரு இடப் பெயர்ச்சியும் செய்யவில்லை.

கும்ப ராசியினைப் பொறுத்தவரை கடந்த ஆண்டானது துன்பம், போராட்டம், நெருக்கடிகள் நிறைந்த ஆண்டாக இருந்திருக்கும். 2024 ஆம் ஆண்டினைப் பொறுத்தவரை சனி பகவான் உங்கள் ராசியில் ஜென்ம சனிபகவானாக உள்ளார். ராகு- கேது பகவான் 2 மற்றும் 8 ஆம் இடங்களில் இட அமர்வு செய்கின்றனர்.

குரு பகவான் 3 ஆம் இடத்தில் இட அமர்வு செய்கின்றார். சனி பகவான் உங்களுக்கு தாங்கும் வலிமையுடன் உங்களுக்குப் போராட்டங்களைக் கொடுப்பதாய் இருக்கும்.

பொருளாதாரரீதியாக பண வரவு சிறப்பாகவே இருக்கும்; ஆனால் செலவினை நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல் வேண்டும். தேவையில்லாத அபாயகரமான முதலீடுகள் எதையும் செய்யாதீர்கள். வரவு, செலவு இரண்டையும் சமாளிக்கும் வகையில் உங்கள் பணவரவு இருக்கும்.

தொழில் வாழ்க்கை என்று கொண்டால் எந்தவொரு பெரிய அளவிலான முதலீட்டையும் செய்யாதீர்கள்.

திருமண காரியங்கள் என்று கொண்டால் வரன் எதுவும் தற்போதைக்குப் பார்க்காமல் இருத்தல் நல்லது. உறவுகளுக்குள் வரன் அமையும் பட்சத்தில் திருமணத்தை 2023 ஆம் ஆண்டில் நடத்தாமல் 2024 ஆம் ஆண்டு நடத்தத் திட்டமிடவும். இல்லையேல் திருமணத்திற்குப் பின் சிறு சிறு பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்கும்.

உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் தேவையில்லாத கெட்ட பழக்கங்களால் உடல் ஆரோக்கியம் கெடும். நண்பர்களைத் தேர்வு செய்யும் போது மிகக் கவனம் தேவை. தேவையற்ற நட்பு வட்டாரத்தால் பெரும் பிரச்சினைகச் சந்திப்பீர்கள்.

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை இது சோதனைகள் நிறைந்த காலகட்டமாக இருக்கும். மன உறுதியுடன் எந்தவொரு விஷயத்தினையும் எதிர்கொள்ளுங்கள்.

குடும்ப உறுப்பினர்கள் ரீதியாக மருத்துவச் செலவுகள் விரயச் செலவுகளாக ஏற்படும். மாணவர்களைப் பொறுத்தவரை முன் அனுபவம் உள்ளவர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவுகளை எடுக்கவும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.