கோப்ரா படத்தின் புதிய அப்டேட்- ‘உயிர் உருகுதே’ பாடல் வெளியீடு!!

தனது நடிப்பால் மட்டுமே தனது உடல் உருமாற்றத்தால் ரசிகர்களை ஏராளமாக சம்பாதித்து வைத்தவர் தான் நடிகர் விக்ரம். ஏனென்றால் இவர் ஒவ்வொரு படத்தின் கதைக்கேற்றபடி தனது உடலையும் உருவாக்கிக் கொள்ளும் பக்குவத்தினை உடையவராக காணப்படுகிறார்.

அதற்கு ஒரு நல்ல உதாரணம் எதுவென்றால் ஐ திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம்தான். இந்த நிலையில் இவர் நடிப்பில் தற்போது மாறுபட்ட கோணத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கோப்ரா.

இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதத்தில் உலக திரையரங்குகளில் வெளியாகியுள்ளதாக பட குழுவினர் அறிவித்துள்ளனர் .நேற்றைய தினம் இந்த படத்தின் உயிர் உருகுதே பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.

இவ்வாறு உள்ள நிலையில் இன்று இந்த பாடத்தின் முழு பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே பொருத்த வரவேற்பு பெற்று காணப்படுகிறது. இந்த பாடல் ஒரு காதல் ரொமான்டிக் பாடலாக உள்ளதால் காதலர்களிடையே வரவேற்பை பெற்று உள்ளதாக நெடிசன் கூறிக்கொண்டு வருகின்றனர்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.