அடிமேல் அடிவாங்கும் நயன்தாரா!.. அன்னபூரணி படம் நெட்பிளிக்ஸில் இருந்து அதிரடியாக தூக்கிட்டாங்க!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது நடித்து வெளியான அன்னபூரணி திரைப்படம் இந்து மக்களின் மத நம்பிக்கையை புண்படுத்துவதாக சர்ச்சை கிளம்பி உள்ளது. இப்படம் மிக்ஜாம் புயலின் போது வெளியானதால் தியேட்டரில் சரியாக ஒடவில்லை, அதைதொடர்ந்து நெட்பிளிக்ஸில் வெளியானது. தற்போது இந்தபடம் நெட்பிளிக்ஸில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது.

அன்னபூரணி படத்தில் நயன்தாரா ஐயங்கார் வீட்டு பெண்ணாக நடித்திருந்தார். அதில் நயந்தாராவுக்கு சிறு வயதிலிருந்தே சமையலில் உள்ள ஆர்வத்தினால் அவர் தந்தை எம்.பி.எ படிக்க சொல்லும் போது ஜெய்யின் உதவியால் குக்கீங் கோர்ஸைத் தெர்ந்தெடுத்து படிக்கிறார். சமையல் கற்றுக்கொண்டிருக்கும் நயன்தாரா அசைவ உணவையும் கற்றுக்கொள்ள அதை சாப்பிட வேண்டிய சுழல் எற்படுகிறது.

நெட்பிளிக்ஸில் இருந்து அன்னபூரணி நீக்கம்:

நயன்தாரா அசைவ உணவை உண்பதை பார்த்த அவர் தந்தை உடனே படிப்பை நிறுத்தி அவருக்கு திருமணம் செய்ய எற்பாடு செய்த நிலையில் அங்கிருந்து தப்பித்து சென்னை சென்று சுவைப்பாக்கும் திறனை இழந்தும் பல தடங்களை தாண்டி சமையல் துறையில் சாதனை புரியும் கதையைக் கொண்டு படத்தை உருவாக்கியிருந்தனர்.

இந்த படத்தின் கருத்துப்படி எல்லா வீடுகளிலும் பெண்கள் தான் சமையல் செய்கிறார்கள். ஆனால் அதை விட்டு வெளியே வருவதில்லை. பெரும்பாலும் ஹோட்டல்களில் ஆண்களே செஃப்பாக உள்ளனர். எனவெ பெண்கள் வீட்டிலே முடங்கி விடாமல் வெளியே வந்து தன் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று இருந்தது. ஆனால், அதை விட அந்த படத்தில் ராமர் அசைவ பிரியர் ,பிராமண வீட்டுப் பெண் அசைவம் சமைப்பது, சாப்பிடுவது மற்றும் இஸ்லாமியரை காதலிப்பது என்கிற சர்ச்சை காட்சிகள் இடம்பெற்றிருப்பது தான் தற்போது பிரச்சனையை உருவாக்கி உள்ளது.

இந்துக்கள் எதிர்ப்பு:

இந்து மதத்தினரின் மனதை புண்படுத்தியதாக அந்த படக்குழுவினரின் மீது மும்பை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், ராம பக்தர்களும் வட இந்தியாவில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக பெரும் போராட்டத்தை நடத்தியதால், படத்தின் தயாரிப்பு நிறுவனம் படத்தை ஓடிடி தளத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது.

மேலும், நயன்தாரா, ஜெய், இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா மற்றும் படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்டோர் மீது மும்பை காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதை தொடர்ந்து, தற்போது படத்தை தயாரித்த ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் மத நம்பிக்கையை புண்படுத்தியதற்காக மன்னிப்புக் கேட்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனத்திடம் இருந்து படத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. பல கோடி ருபாய்க்கு விற்ற படத்தை திரும்ப பெற்றது ஜீ ஸ்டூடியோஸ்க்கு நஷ்டத்தை எற்படுத்தியுள்ளது. விரைவில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு மீண்டும் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.