ஜெயிலர் சக்சஸ்!.. அட்லீயை ஓவர்டேக் செய்த நெல்சன்.. எல்லாம் சூப்பர்ஸ்டாரு மகிமை தானாம்!..

நயன்தாராவின் கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனின் டாக்டர், விஜயின் பீஸ்ட் மற்றும் ரஜினிகாந்தின் ஜெயிலர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார் இயக்குனர் நெல்சன் திலீப் குமார்.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படம் அதிகபட்சமாக தென்னிந்தியாவில் பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தியது. ஜெயிலர் படத்துக்கு போட்டியாக தெலுங்கில் வெளியான மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் போலா சங்கர் திரைப்படம் முதல் நாளில் கூட வசூல் ஈட்ட முடியாமல் திணறியது.

அட்லீயை முந்தும் நெல்சன்:

ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தை இயக்கிய அட்லி இயக்கத்தில் அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த ரேஸில் இயக்குனர் நெல்சன் முந்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்தை மட்டுமின்றி தெலுங்கு நடிகரான சுனில், மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் என அத்தனை பெரிய நடிகர்களையும் ஒரே படத்தில் கையாண்ட விதத்தை பார்த்த அல்லு அர்ஜுன் புஷ்பா 2 திரைப்படத்தை முடித்துவிட்டு நெல்சன் இயக்கத்தில் நடிக்கலாம் என்றும் நெல்சனின் டார்க் காமெடி தீம் தனக்கு ரொம்பவே செட் ஆகும் என்பதை உணர்ந்த நிலையில் இப்படி ஒரு முடிவை அல்லு அர்ஜுன் எடுத்திருப்பதாக உள்ளன.

புஷ்பா 2வுக்கு பிறகு தரமான சம்பவம்:

புஷ்பா 2 படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார் அல்லு அர்ஜுன். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள அந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புஷ்பா முதல் பாகத்திலேயே பாலிவுட் ரசிகர்களை கவர்ந்த அல்லு அர்ஜுன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் தட்டிச் சென்றுள்ளார்.

ராஜமெளலியே வெயிட்டிங்கில்:

இயக்குனர் ராஜமௌலி மகேஷ்பாபுவின் படத்தை முடித்த பின்னர், அல்லு அர்ஜுன் படத்தை இயக்குவார் என முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. தற்போது நெல்சன் மற்றும் அட்லி என தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர்களின் அல்லு அர்ஜுன் படத்தை இயக்கப் போவதாக அடிபட்டு வருகின்றன.

கூடிய விரைவில், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் அல்லு அர்ஜுன் வெளியிடுவார் என தெரிகிறது. புஷ்பா 2 திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே இந்த அறிவிப்பை அல்லு அர்ஜுனிடம் இருந்து எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.

தமிழில் அடுத்தடுத்து வெற்றி படங்களை இயக்கி வந்த நெல்சனுக்கு அல்லு அர்ஜுன் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் அது உண்மையாகவே பான் இந்தியா திரைப்படமாக மாறும் என்றும் கூறுகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...