வீட்டில் பாத்திரம் கழுவும் நீயா நானா கோபிநாத்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி நீயா நானா ஆகும். இது பல ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. வாரத்தில் ஒருநாள் ஒளிபரப்பானாலும் இதன் டிஆர்பியை அடிச்சுக்க ஆளே கிடையாது.

அதற்கு முக்கிய காரணம் அந்நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கும் கோபிநாத் அவர்கள்தான். அவரின் மிடுக்கான பேச்சும், ஆளுமையும் நிகழ்ச்சியின் வெற்றிக்குக் காரணமாகும்.

05777524c10dbc0f9962973525ed6f02

ஒட்டுமொத்த நிகழ்ச்சியினையும் அவரது ஆளுமையால் கட்டுப்படுத்தி இளைஞர்கள், பெரியோர்கள் என அனைத்துத் தரப்பினரும் ரசித்துப் பார்க்கவைக்கும் நிகழ்ச்சியாகும்.

அவர் அதுமட்டுமின்றி சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார், அதுமட்டுமின்றி நிமிர்ந்து நில் படத்தில் மிகச் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதினை கொள்ளை கொண்டார்.

இயக்குனர் பாரதி கணேஷ் இயக்கும் படத்தில், இது எல்லாத்துக்கும் மேல என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். தற்போது கொரோனாவால் சினிமா, சீரியல் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத பட்சத்தில் வீட்டில் அவரது மனைவிக்கு பாத்திரம் கழுவிக் கொடுத்து உதவி செய்துள்ளார். இந்தப் புகைப்படம் வலைதளங்களில் வைரலாக அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

இன்னும் சிலர் நீயா நானா? நிகழ்ச்சியினை எதிர்பார்த்து இருக்கிறோம் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.