18 வருடங்களை கடந்த நீயா நானா… இந்த வெற்றிக்கு இவர்கள் தான் காரணம்… கண் கலங்கிய கோபிநாத்…

2006 ஆம் ஆண்டு முதல் விஜய் டிவி நடத்தி வரும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பாகும் ஒரு பேச்சு நிகழ்ச்சி தான் ‘நீயா நானா’. இரு துருவத்தை சார்ந்த மக்கள் பல்வேறு விதமான தலைப்புகளின் கீழ் விவாதிப்பார்கள்.

அலுவலகம், நாடு, பொதுவானது என அனைத்தையும் விவாதித்து அதன் பிரச்சனைகளுக்கான மூல காரணம் என்ன என்பதை கண்டுபிடித்து அந்த பிரச்சனைகளை களைய வழி தேடும் விதமாக அந்த நிகழ்ச்சியின் விவாதங்கள் இருக்கும்.

இந்த விவாத நிகழ்ச்சியை அன்று முதல் இன்று வரை தொகுத்து வழங்குபவர் கோபிநாத். வள வள பேச்சுக்கள் இல்லாமல் தலைப்பின் கீழ் தேவையானவற்றை நேர்த்தியாக பேச வைத்து நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்பவர் கோபிநாத்.

தற்போது ‘நீயா நானா’ நிகழ்ச்சி 18 வருடங்களை கடந்து விட்ட நிலையில் அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கான காரணத்தை பகிர்ந்துள்ளார் கோபிநாத். அதில் அவர் கூறியது என்னவென்றால், இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு எங்கள் முழு ‘நீயா நானா’ டீம் தான் காரணம். அதிலும் குறிப்பாக ஆண்டனி மற்றும் திலீபன். திலீபன் அவ்வளவு திறமையானவர். ஒவ்வொரு தலைப்பிற்கு வெவ்வேறு இடத்தில் ஆராய்ச்சி செய்து கன்டென்ட் எடுத்து நானும் அவரும் பேசிக்கொண்டிருப்போம்.

அதே மாதிரி தான் ஆண்டனியும். ஆனால் ஆண்டனி எனக்கு ஆசான் போன்றவர். அவரிடம் எதாவது கேட்க எனக்கு தயக்கம் இருக்கும் ஆனால் திலீபன் எனக்கு ஜூனியர் என்பதால் கொஞ்சம் என் ஐடியாவையும் சொல்ல முடியும். ஒரு எபிசோட் ஷூட்டிங் முடிக்க கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ஆகும். ஒரு நாளில் மூன்று எபிசோட் கூட ஷூட்டிங் பண்ணிருக்கோம் தொடர்ந்து பதினெட்டு மணி நேரம். ஆனாலும் எல்லாரும் கோ-ஆபரேட் பண்ணுவாங்க அப்படி ஒரு டிசிப்ளின் ஆன டீம் எங்க ‘நீயா நானா’ டீம். அவங்க இல்லனா இந்த வெற்றி சாத்தியம் இல்ல என்று கண் கலங்கி பேசியுள்ளார் கோபிநாத்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...