ஒரு ஆப்பிள் 150 ரூபாயா? சாப்பிடறத்துக்கே தனியா லோன் வாங்கணும் போலயே. இலங்கை மக்களின் மோசமான நிலைமை!

இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே பொருளாதாரத் தட்டுப்பாடானது நிலவுகிறது. அந்நியச் செலவாணி கையிருப்பில் இல்லாத நிலையில் எரிபொருள் எதையும் வாங்க முடியாமல் திணறுகிறது.

இதனால் மக்கள் உணவில் துவங்கி பல வகையான அத்தியாவசியப் பொருட்களுக்கும் பெரிய அளவில் அவதியுற்று வருகின்றனர்.

இந்திய அரசு 7500 கோடி கடனாக இலங்கை அரசுக்கு கொடுத்த நிலையிலும் இலங்கை அரசு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறது.

அதனால் அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றையும் லிஸ்ட்டில் இருந்து தூக்க அந்தப் பொருட்களின் விலைவாசியோ தாறுமாறாக எகிறியுள்ளது.

இலங்கையில் விற்கப்படும் சில பொருட்களின் விலையினைக் கேட்டு பலரும் ஷாக் ஆகிப் போய் உள்ளனர்.

அதாவது ஒரு ஆப்பிள் 150 ரூபாய்;

முட்டை விலை- 30 ரூபாய்;

பெட்ரோல் விலை- 289 ரூபாய்;

ஒரு வாழைப்பழம்- 23 ரூபாய்;

ஒரு ஆரஞ்சு- 52 ரூபாய்;

ஒரு மாதுளை- 78 ரூபாய்;

ஒரு தர்பூசணி-  220 ரூபாய்;

இவை இப்படி இருக்க தங்கமோ 1 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய்க்கு எகிறியுள்ளது.

இனி சாப்பிடணும்னா கூட பேங்குல கடன்தான் வாங்கணும் போல என்பதுபோல் ஆகிவிட்டது பொதுமக்களின் நிலைமை.

மேலும் எரிபொருள் தட்டுப்பாட்டால் உணவு சார்ந்த பிசினஸ்களான ஹோட்டல்கள், பேக்கரிகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன.

Published by
Gayathri A

Recent Posts