“நீ அப்போது பார்த்த புள்ள”… வைப் மோடில் சுற்றி திரியும் 2k கிட்ஸ்!

காதல் இல்லாமல் மனித வாழ்வே இல்லை. கண்களை பார்த்து கவிதை பாடுவதும், காதலன், காதலியின் கைகளை தீண்டிடும் ஆசைகளை பாடல் வரிகளில் திளைத்து போவதும் பேரின்பம் தான். காதல் பல தியாகங்களையும், மாயங்களையும் நிகழ்த்தி மனித சமூகத்தை மகிழ்ச்சி கடலில் வாழவைத்து கொண்டே இருக்கிறது.

என் அன்பு நம்மை விட்டு சென்று விடும் என்பதற்காக சண்டையிடுகிறோமோ அதே அன்பால் நாம் பிரிந்து செல்கிறோம். இன்றைய இளைஞர்கள் காதல் தோல்வியை கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு செல்வதும் இசைதான். ஒருவரின் சோகத்தை தீர்ப்பதும் இசைதான், சோகத்திற்கு காரணமாக இருப்பதும் இசைதான். தொழில்நுட்பம் வளர்ச்சியால் சில பாடலை கேட்டிருப்போம் ஆனால் அதன் படம் பெயர் தெரியாது. அந்த படத்தை பார்த்தால் 80களில் வெளியான படமாக இருந்தால் சிலாகித்து பேசி மகிழ்வோம்.

எப்படிப்பட்ட பாடல் இன்றைய காலகட்டத்திற்கு பொருந்துகிறதே என்றும் விவாதிக்க தொடங்குவோம். ஆனால், காதல் தோல்வி ஒரு அழகான அனுபவம். காதலில் தோல்வியுற்றால் வலியால் துடித்து அழும் நோயாளி ஆவார்கள். இந்த காதலே இப்படித்தான் சோகத்தில் தவிக்க வைக்கும், ஆழமான நினைவுகளால் ஆட வைக்கும். காதல் தோல்வியும் ஒரு கொண்டாட்ட மனநிலை தான்.

80களில் தவறவிட்ட பாடல்களை 90ஸ் கிட்ஸ் மட்டும் அல்ல 2k கிட்ஸ்களும் ஆடி பாடி கொண்டாடி மகிழ்கின்றனர். ஒரு வைப் மோடில் இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் காதல் தோல்வி சாபமில்லை வரம் தான் என்பதை உணர்த்துகிறது. முகநூல், இன்ஸ்டா ரீல்ஸ் என எந்த பக்கம் திரும்பினாலும் ‘நீ அப்போது பார்த்தபுள்ள’ பாடலின் ஏக்கம் குறையாமல் ததும்பிக் கொண்டிருக்கிறது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பகல் நிலவு படத்தில் இளையராஜா இசையில் இடம்பெற்ற இந்த பாடல் சோகத்தில் குத்தாட்டம் போட வைக்கிறது. அதுவும், நீர் தேக்கம் இரவும் நெருப்பும், பாட்டுக்கும் வசனம் போல தான். சக் சக் னு காட்சி மாறிக்கொண்டே இருக்கிறது.பனி விழும் இரவுக்கு முந்தின வெர்சன் இந்த பாட்டு தான் போல.

“நீ அப்போது பார்த்த புள்ள…..ஆஹாஹா….இப்ப அடையாளம் தெரியவில்லை… ஆஹாஹா…
அட என்னமோ சொல்லுற… அட என்னமோ சொல்லுற…. எங்கயோ கிள்ளுற…..”

கொஞ்சம் மூச்சு விட நேரம் வேணாமா… உடனே அடுத்த அடி… மத்தள வெடி…

என் போதை தெளியவில்லை… ஆஹாஹா… அட என்னன்னு விளங்கவில்லை”

காதலுக்காக ஏங்கும் ஒரு தலை காதலனை பார்வையால் கண்ணீர் வரவைக்கும் நடிகை. பெருக்கெடுத்து ஓடும் நதியின் ஆழத்தை அறிய ஒரு வீணை தேவை என்பது போல் இருந்தது அந்த காட்சி. பாடலை ரசிக்க ரசிக்க துள்ளலும், சோகமும் ஒருமுகமாய் காட்சியளிக்கிறது.ராகதேவன் எனும் இசை போதை எப்படி தெளியும். ஒரு காதல் தோல்விக்கு ஏங்க செய்யும் இளையராஜாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கலாம்.

காதலின் சோகத்தை தீர்க்க ஒரு குப்பி மதுவும், ஆட்டமும், கண்ணீரும் போதாது மனதை மயக்கும் இசையும் தேவை. தோண்ட தோண்ட கிடைக்கின்ற புதையலை போல இளையராஜா கொடுத்து கொண்டிருக்கிறார். ரத்த கண்ணீர் படத்தில் எம் ஆர். ராதா கூறிய வசனங்களை போல அள்ளி அள்ளி பருக கூடிய அமிர்தம் தான் இந்த பாடல்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...