அடுத்தடுத்த தோல்வி… ஹீரோயினாக இல்லாமல் அக்கா கேரக்டரில் களமிறங்கும் நயன்தாரா!

தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் நயன்தாரா தமிழில் ஐயா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தில் கிடைத்த நல்ல விமர்சனங்களை தொடர்ந்து ரஜினி விஜய் அஜித் சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தற்பொழுது பிரபலத்தின் உச்சியில் இருக்கும் நயன்தாரா பெண்களை மையப்படுத்தி வரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றிகளை குவித்து வருகிறார். தமிழ் ரசிகர்களால் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகிகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக விளங்குகின்றார்.

இந்த நிலையில் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான இறைவன் திரைப்படம் சுமாரான வெற்றியை தழுவியது. அதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான அன்னபூரணி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூல் ரீதியாக சாதனை படைக்க தவறியது. நயன்தாராவின் 75 திரைப்படம் ஆக வெளியான அன்னபூரணி திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதைத்தொடர்ந்து டெஸ்ட் திரைப்படம், யூடியூபர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.

அடுத்தடுத்து பல இளம் இயக்குனர்களுடன் கைகோர்த்து பிசியாக நடித்து வரும் நடிகை நயன்தாரா சிறப்பு கேமியோ தோற்றத்தில் அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்திய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நயன்தாராவின் காதல் கணவரான இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்பொழுது லவ் டுடே ஹீரோ பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் தயாரிக்கும் இந்த படத்தின் பட்ஜெட் மட்டும் 60 கோடியாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ஹீரோ பிரதீப் ரங்கநாதன் அவர்களின் சம்பளம் மற்றும் 15 கோடியாக இருக்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

தலைவர் 171 படத்தில் வில்லனாக களம் இறங்க காத்திருக்கும் 5 ஹீரோக்கள்!

மேலும் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, இயக்குனர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகை நயன்தாரா இந்த படத்தில் முக்கிய கேம்பியோ ரோலில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது நடிகை நயன்தாரா இந்த படத்தில் ஹீரோயினின் அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது. நயன்தாராவின் அடுத்தடுத்து வெளியான படங்களில் தோல்வியில் இந்த முடிவில் இறங்கியுள்ளாரா என்று ரசிகர்களும் கேள்வி கேட்டு வருகின்றன.

ஆனால் நயன்தாரா விக்னேஷ் சிவன் இயக்கம் படத்தின் விளம்பரத்திற்காகவே இந்த படத்தில் கேமியோவில் நடித்து வருவதாகவும் ஒரு பக்கம் தகவல்கள் கூறப்படுகிறது. நயன்தாரா நடிப்பதன் மூலமாக இந்த படத்தின் மார்க்கெட், வசூல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதை மையமாக வைத்தே நயன்தாரா இந்த படத்தில் களம் இறங்கி உள்ளதாகவும் அதிரடியான தகவல்கள் வெளியாகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.