நயன்தாரா, மாதவன், சித்தார்த்!.. அட மீரா ஜாஸ்மினும் இருக்காங்களா!.. டெஸ்ட் பட அப்டேட் இதோ!..

நயன்தாரா, மாதவன், சித்தார்த் மற்றும் மீரா ஜாஸ்மின் நடிப்பில் உருவாகியுள்ள டெஸ்ட் படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்து விட்டதாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக வளம் வரும் நயன்தாரா தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ஜவான், இறைவன், அன்னபூரணி என மூன்று படங்களை வெளியிட்டார். இந்நிலையில், வரும் சம்மருக்கு டெஸ்ட் படத்தை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

டெஸ்ட் சூட்டிங் நிறைவு:

டெஸ்ட் திரைப்படம் டைட்டிலுக்கு ஏற்றவாறு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை மையப்படுத்தி உருவாகி வருகிறது. இந்தப் படத்தை இயக்குனர் சசிகாந்த் இயக்கி வருகிறார். பிரியமான தோழி படத்தில் மாதவன் கிரிக்கெட் வீரராக நடித்த நிலையில் பல ஆண்டுகள் கழித்து கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படத்தில் மாதவன் இணைந்துள்ளார். சமீபத்தில் சித்தா படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை ருசித்த நடிகர் சித்தார்த் இந்தப் பழத்தில் கிரிக்கெட் வீரராக நடித்துள்ளார். நயன்தாரா மற்றும் மீரா ஜாஸ்மின் நடித்துள்ள இந்த திரைப்படம் எப்படி இருக்கும் என்கிற ஆர்வத்தை தற்போது வெளியாகி உள்ள மேக்கிங் டீசர் தூண்டி இருக்கிறது.

இந்தப் படத்தை தொடர்ந்து மண்ணாங்கட்டி எனும் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். ஜெயிலர் 2 படத்திலும் நயன்தாரா நடிக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதன், எஸ் ஜே சூர்யா மற்றும் கீர்த்தி ஷெட்டியை வைத்து லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என் படத்தை தீவிரமாக இயக்கி வருகிறார். அந்தப் படத்தில் சமீபத்தில் சீமான் முக்கிய கதாபாத்திரத்தின் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நயன்தாரா வெளியிட்ட அப்டேட்:

தமிழ் சினிமாவில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்து வரும் டெஸ்ட் திரைப்படம் நிச்சயம் சிறப்பான தரமான வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அட்லீ இயக்கத்தில் அடுத்து அல்லு அர்ஜு படம் உருவானால், அந்த படத்திற்கும் ஹீரோயினாக நயன்தாராவை ஒப்பந்தம் செய்வார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews