அடேங்கப்பா!.. ஜோடியா அட்டை படத்தில் இடம்பெற்ற நயன்தாரா, விக்னேஷ் சிவன்.. அதுதான் விஷயமா?

லேடி சூப்பர் ஸ்டார் என தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியத் திரையுலகமே கொண்டாடப்படும் அளவுக்கு பாலிவுட் முதல் கோலிவுட் வரை வளர்ந்து நிற்கும் நடிகை நயன்தாரா தனது கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பிரபல மாத இதழின் அட்டைப்படத்திற்கு அழகாக போஸ் கொடுத்துள்ளார். தற்போது சோசியல் மீடியா முழுவதும் நயன்தாரா ஹேஷ்டேக் தான் ட்ரெண்டாகி வருகிறது.

கவர் போட்டோவில் கணவருடன் நயன்தாரா:

மலையாளப் படங்களில் நடித்து வந்த நயன்தாரா தமிழில் ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடித்து வெளியான ஐயா படத்தின் மூலம் அறிமுகமானார். ”ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்” என பாடி நடனமாடிய நயன்தாரா முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்துவிட்டார்.

அடுத்த படமே பி. வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, தனுஷ், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது.

நடுவில் நயன்தாராவுக்கு பட வாய்ப்புகள் சொதப்ப ஆரம்பித்த நிலையில் அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. பாலிவுட்டில் ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் நயன்தாரா தான் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என அடம் பிடித்து அட்லி ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைத்திருந்தார்.

அட்லிகாக மட்டுமே ஹிந்தியில் நடிக்க சம்மதித்த நயன்தாரா அடுத்து பெரிதாக எந்த ஒரு படத்திலும் பாலிவுட்டில் நடிக்க ஆர்வம் செலுத்தவில்லை என்றே தெரிகிறது.

இந்நிலையில், நயன்தாரா சொன்னது கணவர் விக்னேஷ் இவனுடன் சிவனுடன் ஹலோ மேகசின் என்னும் மாத இதழின் ஏப்ரல் மாத கவர் போட்டோவில் ஜோடியாக போஸ் கொடுத்து உள்ளார். தற்போது அதன் புகைப்படங்களை தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா வெளியிட்ட நிலையில் ட்விட்டரில் #Nayanthara ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி என இரு படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகி வருகின்றன. 10 கோடியில் இருந்து தனது சம்பளத்தை 11 கோடியாக நயன்தாரா மாற்றி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...