நாளை நீர்தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?!

பாஞ்சால நாட்டில் பூரியசஸ் என்ற அரசன் இருந்தான். வேற்று நாட்டு அரசனிடம் தன் நாட்டை இழந்து தன் மனைவி சிகிநீயுடன் காட்டிற்கு சென்று முப்பது ஆண்டுகள் படாதபாடுபட்டான். அவ்வழியே, தற்செயலாய் சென்ற யாஜகர், உபயாகர் என்ற முனிவர்கள் அவ்வழியே சென்றனர். அவர்களை கண்டதும் காலில் விழுந்து வணங்கி பணிவிடை செய்து தன் நிலையை எடுத்து சொன்னான். ராஜாதிராஜன் இன்று குடிசையில் வாழும் காரணத்தை தங்கள் ஞானத்திருஷ்டியில் கண்டனர். மன்னா! பத்து தலைமுறைகள் நீ வேடனாய் இருந்து பத்தாவது பிறவியில் கௌட தேசத்தின் காட்டில் இருக்கும்போது வழிப்பறியில் ஈடுபட்டும், முனிவர்களை இம்சித்தும் பல கொடுமைகளை செய்து வந்ததன் பலனை இப்போது அனுபவிக்கிறாய். இவ்வளவு கொடுமை செய்தும் எப்படி மன்னனாய் பிறந்தேன் என வினவி நின்றான் பூரியசஸ்.


ஒருநாள் அவ்வழியே சென்ற இரண்டு வைசியர்கள் மற்றும் ஒரு அந்தணரையும் நீ அடித்து துன்புறுத்தி அவர்களிடம் கொள்ளையடிக்க பார்த்தாய். அந்தணர் கொண்டு வந்த செல்வங்களோடு ஓடி விட்டார். பொருட்கள் மீதான ஆசையினால் அந்தணருக்கு மூர்ச்சை தெளிவிக்கும் பொருட்டு அவருக்கு தண்ணீர் கொடுத்தாய். அனறைய தினம் சித்திரை மாதம் திருதியை நட்சத்திரம். அன்றைய தினம் நீ அறியாமல் செய்த நீர்தானமே உன்னை ராஜாதிராஜனாய் பிறக்க வைத்தது என்றனர்.

நீர் தானத்திற்கு அத்தனை மகத்துவம் உண்டு. தண்ணீருக்கு தவிக்கும் இந்நாளில் தண்ணீரை தானம் செய்வதால் மிகுந்த புண்ணியம் பெறலாம்.

Published by
Staff

Recent Posts