நடிகர் திலகம்ன்னா சும்மா இல்லை.. ஒரு நாள் கூட தவற விடாத பயிற்சி..!

ஒருவர் ஒரு துறையில் சாதித்து விட்டார் என்பது எப்படி தெரியும்..? அந்தத் துறையில் அவர் மேற்கொண்ட பயிற்சிகள், சாதனைகள், மகுடங்கள், இதுவரை யாரும் செய்யாத முயற்சிகள் என அனைத்துமே அவர்களுக்கு அந்த கௌரவத்தை அளிக்கிறது. ஆனால் இதை அவர்கள் பெறுவதற்கு முன் எடுத்த பயிற்சிகளும், போராட்டங்களும், பெற்ற அவமானங்கள் என அனைத்தும் பின்னனியில் இருக்கும்.

இதேபோல் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும், நாடி நரம்பெல்லாம் நாடகம், சினிமா வெறி ஊறிய ஒருவர்தான் இந்த மாதிரியான சாதனைகளைப் படைக்க முடியும் என்பதற்கு நடிகர் திலகம் ஓர் ஒப்பற்ற எடுத்துக்காட்டு. திரைத்துறையில் அவர் படைக்காத சாதனைகளே இல்லை என்னும் பொருட்டு அவருக்கு வழங்கப்பட்ட உயரிய விருதுதான் தாதாசாகேப் பால்கே, செவாலியே உள்ளிட்ட விருதுகள்.

இத்தனை சாதனைகளையும் படைப்பதற்கு அவர் மேற்கொண்டது பயிற்சிகள். தனக்கு நன்றாக நடிப்பு வரும் என்பதற்காக அவர் பயிற்சி எடுப்பதை நிறுத்தவில்லை. உழைத்தார்.. உழைத்தார்… உழைத்தார் எப்படி தெரியுமா?

கில்லி ‘கொக்கர கொக்கரக்கோ‘ பாடல் இப்படித்தான் உருவாச்சா? அதென்ன சுராங்கனிகா மாலுகண்ணா வா..

சிவாஜி அவர்கள் சிறுவனாக இருந்த போது ரொம்பவே ஒல்லியாக இருந்தாலேயே அவரின் கண் மட்டுமே பெரிதாக காணப்படுமாம். இதை பார்த்தே மூக்கும், முழியுமாக இருக்கான் என நாடகத்தில் சேர்த்து கொண்டனராம். இவர் ஆசிரியர் சின்ன பொன்னுசாமி பிள்ளை கிருஷ்ணன் வேஷத்தை கொடுத்தாராம். அடுத்து சூர்ப்பனகை வேடம் தந்தாராம். இந்த வேடங்களில் தான் அதிகம் கண்ணால் நடிக்க முடியும் என அவர் செய்தாராம்.

அதுமட்டுமல்லாமல் அடிக்கடி அழைத்து ‘கண்ணை நல்லா உருட்டிக்காட்டு’ எனச் சொல்லி கொண்டே இருப்பாராம். குளிக்கும் போது, முகசவரம் செய்யும் போது, பல்துலக்கும் போது முகம் எப்படி மாறுகிறது என்பதை கவனத்து கொண்டே இருப்பாராம். அது தன் படத்துக்கு பயன்படும் என்பதால் இதை தவறவிடமாட்டாராம். இவ்வாறு சிவாஜியை நடிப்பில் செதுக்கியவர் அவரது ஆசான்.

ஆனால் சிவாஜி நன்கு வளர்ந்த நடிகரானது போது கூட  தினமும் காலையில் குளிக்க போகும் போது கண்ணாடி முன் நின்று அன்று நடிக்க இருக்கும் கதாபாத்திரம் போல நடித்து பார்த்து கொள்வாராம். இதை பல வருடங்களாகவே காலையில் செய்வதை வழக்கமாகவே வைத்து இருந்தாராம். ஒரு நாள் தவறவிடாமல் செய்தார் என்பது தான் ஆச்சரியமான விஷயம்.

இவ்வாறு பயிற்சி எடுத்து நடித்த நடிகர் திலகம் தன் வாழ்நாளில் 288 படங்களில் நடித்துள்ளார். பல ஆயிரம் மேடை நாடகங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews