என் சேவைகள் எனது குழந்தைகளை நிச்சயம் காக்கும்… லாரன்ஸின் கடிதம்!!

நடிகர் ராகவா லாரன்ஸ் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஆசிரம் நடத்தி வருவதோடு, மனித ஜீவன்கள் எங்கு தவித்தாலும் உதவிக்கரம் நீட்டும் முதல் நபராக இருப்பவர். இவர் கொரோனா தொற்றால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்கு 4 கோடி ரூபாய் நிதி உதவி செய்துள்ளார்.

அதுதவிர தனது நண்பர்களுடன் இணைந்து ஒரு தன்னார்வ அமைப்பாக சினிமாப் பிரபலங்கள், தொழிலதிபர்களிடம் பொருளதவி மற்றும் பண உதவிகளைப் பெற்று, உணவுக்கு கஷ்டப்படும் மக்களுக்கு வழங்கி வந்தார்.

b98736812961d9495e2a803e11b73db1

சமீபத்தில் இவர் அசோக் நகரில் நடத்தி வரும் ஆதரவற்றோர் அறக்கட்டளையில் உள்ள 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து லாரன்ஸ் தற்போது ட்விட்டரில் கூறியிருப்பதாவது, “எனது அன்பான ரசிகர்களே நான் ஆதரவற்ற குழந்தைகளுக்காக நடத்தும் அறக்கட்டளையில் உள்ள 18 குழந்தைகளுக்கும் 3 ஊழியர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், குழந்தைகள் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. விரைவில் குணமான பின்னர் அவர்கள் அறக்கட்டளைக்கு திரும்ப அழைத்துச் செல்லப்படுவார்கள்.

குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாநகராட்சி கமிஷனர் ஆகியோருக்கு நன்றிகளைக் கூறக் கடமைப்பட்டுள்ளேன். நான் இப்போது செய்யும் சேவைகள் எனது குழந்தைகளை நிச்சயம் காக்கும்” என்று லாரன்ஸ் கூறியுள்ளார்.

உங்க மனசுக்கு உங்க குழந்தைங்க மட்டும் இல்லண்னே, உங்க தலைமுறைக்கே நல்லது மட்டும்தான் செய்வார்” என்று கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...