முதல் மரியாதை படத்திற்காக முதலில் தேர்வு செய்யப்பட்ட ஹீரோ ஒரு பாடகரா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே?

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பில் வெளியான முதல் மரியாதை திரைப்படத்தை பார்க்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு வெற்றி பெற்ற சிவாஜியின் திரைப்படங்களில் அதுவும் ஒன்று. நடிகர் திலகம் வயதான பின்பும் ஹீரோவாக நடித்த ஒரே மிகச் சிறந்த திரைப்படம் முதல் மரியாதை திரைப்படம். இந்த படம் குறித்த ஒரு சுவாரசியமான தகவல் தற்போது கிடைத்துள்ளது. அந்த தகவலை இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

1985 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் முதல் மரியாதை இந்த திரைப்படத்தில் ராதா கதாநாயகியாக நடித்திருப்பார் வடிவுக்கரசி வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படத்தின் பின்னணி மற்றும் பாடல் இசை அனைத்தும் இளையராஜா இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தின் அனைத்து பாடல் வரிகளையும் வைரமுத்து எழுதியுள்ளார்.

படத்தின் முழு படப்பிடிப்பும் முடிக்கப்பட்ட பின் இந்த படம் இசையமைப்பதற்காக சென்றது. அப்பொழுது இந்த படத்தின் மீது வைரமுத்து அவர்களுக்கும், இசையமைப்பாளர் இளையராஜாவிற்கும் விருப்பமும் இல்லை. வெளிப்படையாக கூற வேண்டும் என்றால் இந்த படத்தின் கதை அவர்களுக்கு பிடிக்கவில்லை. இப்படி ஒரு கதையை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வது கடினம் என இருவரும் பாரதிராஜாவிற்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

பாரதிராஜா பலரின் எதிர்ப்பை மீறி துணிச்சலாக இந்த படம் வெற்றி பெரும் என எடுத்து வெளியிட்ட திரைப்படம் தான் முதல் மரியாதை. மேலும் இந்த படத்தில் திலகம் சிவாஜியை நடிக்க வைப்பதற்கு சற்று சிரமம் ஏற்பட்டதாகவும் இந்த படம் திரையில் வெற்றி பெறாமல் இருந்திருந்தால் தான் திரை வாழ்க்கை முற்றிலும் முடிந்திருக்கும் என இயக்குனர் பாரதிராஜா பல மேடைகளில் கூறியுள்ளார்.

இவ்வளவு எதிர்ப்புகளுக்கு பின்னணியில் இந்த திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் பெற்றது நாம் அனைவருக்கும் தெரிந்தது. இன்றளவும் சிவாஜியின் நடிப்பில் பல திரைப்படங்கள் வெளி இருந்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை முதல் மரியாதை திரைப்படம் பெற்றுள்ளது. சமீபத்தில் இந்த திரைப்படம் டிஜிட்டல் முறையில் வெளியிடப்பட்டு அதிலும் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி சாதனை புரிந்தது.

இந்தத் திரைப்படத்திற்கு 1986 ஆம் ஆண்டு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதையும் வென்றுள்ளது. பல வெற்றிகளை குவித்து காலத்தால் அழிக்க முடியாத காவியமாக இருக்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயகராக சிவாஜி அவர்கள் நடித்திருப்பார் முதலில் இந்த படத்தில் அவருக்கு பதிலாக வேற ஒரு நடிகர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவர் நடிகரும் இல்லை.

தளபதி 68 படத்தில் இணைந்த அஜித் பட ஹீரோயின்! அதுவும் அவருக்கு ஜோடியாகவா?

முதலில் இந்த படத்தில் நடிக்க சிவாஜி இடம் பேசுவதற்கு முன்னதாக இயக்குனர் பாரதிராஜா பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் இடம் படத்தில் நடிக்குமாறு கதை கூறியுள்ளார். இயக்குனர் தேர்ந்தெடுத்த முதல் ஹீரோ எஸ்.பி. பாலசுப்ரமணியன் தான். ஆனால் கதை கேட்ட எஸ் பி பி கதை மிகச் சிறப்பாக உள்ளது. ஆனால் இந்த கதை கேட்டதை போல் நடிக்கும் திறமை என்னிடத்தில் இல்லை எனக் கூறி மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதன் பின் இந்த கதை சிவாஜி இடம் சென்று அவரிடம் ஒப்புதல் வாங்கி படமாக்கப்பட்டது. சிவாஜி நடிப்பில் இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பாரதிராஜா அவருக்கு பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...