இசையமைப்பளார் தேவாவின் ஒயிட் & ஒயிட் டிரஸ்ஸுக்குப் பின்னால இப்படி ஒரு சம்பவமா? ஆளையே மாற்றிய பாடகர்

ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒரு தனித்துவ அடையாளம் இருக்கும். எம்.ஜி.ஆர் என்றால் வெள்ளைத் தொப்பி, மகாத்மா காந்தி என்றால் கையில் தடி, அரை ஆடை கோலம், பாரதி என்றால் முண்டாசு. இப்படி நாம் அவர்களைக் கற்பனை செய்து பார்த்தோம் என்றால் அவர்களது உருவம் பதிவதற்குப் பதில் அவர்கள் உடுத்தியிருக்கும் ஆடைகளே முதலில் ஞாபகத்திற்கு வரும். அவர்களை ஓவியமாக வரைந்தாலும் இவை இல்லாமல் வரைந்தால் அது முழுமை பெறாது.

இவ்வாறு தனக்கென ஒரு தனி அடையாளத்தினை ஏற்படுத்திக் கொண்டு இசையுலகில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் போட்டியாக கலக்கியவர்தான் தேவா. இவர் இசையமைக்காத நடிகர்களே இல்லை என்றும் சொல்லும் அளவிற்கு 700 படங்களுக்கு மேல் இசையமைத்து பல ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார்.

தேவாவினைப் பொறுத்த வரை இசையைத் தவிர அவரது தனிப்பட்ட அடையாளம் அவரது ஒயிட் & ஒயிட் காஸ்ட்டியூம் தான். எந்த நிகழ்ச்சிகள், பேட்டிகள் என எங்கு தேவாவைப் பார்த்தாலும் இதே தூய வெள்ளை ஆடையில்தான் வருவார்.

இவ்வாறு தேவாவின் இந்த தோற்றத்திற்குப் பின் ஒரு சுவாரஸ்ய நிகழ்வே இருக்கிறது. தேவா திரைப்படங்களில் இசையமைக்கும் காலகட்டத்திற்கு முன்பாக பல பக்திப்பாடல்களுக்கும், கச்சேரிகளுக்கும் இசையமைத்து வந்திருக்கிறார். ஒருமுறை பக்திப் பாடல் பதிவிற்காக கர்நாடக இசை மேதையான பாலமுரளி கிருஷ்ணாவை சந்திக்க நேரிட்டது. தேவாவின் இசையில் பாலமுரளி கிருஷ்ணா பாடுவதாக இருந்தது.

அங்காடித் தெருவில் மிரட்டிய கருங்காலி.. விஜய், சிம்பு பட இயக்குநராக இத்தனை படங்களா? சரத்குமார் கொடுத்த வாய்ப்பு

பாடல் பதிவு நடைபெற உள்ள அந்த நாளில் தேவா இப்போது போல் இல்லாமல் ஜீன்ஸ் பேண்ட், சட்டை, வலது கையில் வாட்ச் என டிப் டாப் ஆக இருந்து பாடல் பதிவு நடைபெற உள்ள ஸ்டுடியோவின் வாசலில் அமர்ந்து புகைப் பிடித்துக் கொண்டிருந்தாராம். இவரை இசையமைப்பாளர் என அறியாத பாலமுரளி கிருஷ்ணா அவரைக் கடந்து சென்றிருக்கிறார்.

அப்போது பாலமுரளி கிருஷ்ணா தயாரிப்பு நிறுவனத்திடம் இசையமைப்பாளர் வந்தாச்சா என்று கேட்டுள்ளார். அவர் அப்பவே வந்து விட்டார் வெளியே அமர்ந்திருக்கிறார் என்று கூற, பாலமுரளி கிருஷ்ணா தேவாவைப் ஆள் இப்படி இருக்கார் இவர் எப்படி பக்திப் பாடல்களுக்கு இசையமைப்பார் என்று சந்தேகத்தோடு பார்த்துள்ளார்.

பின்னர் தேவாவிடம் பாடலுக்கான டியூனைக் கேட்க, அப்போது தேவா ஒரு டியூனைக் கொடுத்திருக்கிறார். அதில் வியந்து போன பாலமுரளி கிருஷ்ணா இது என்ன ராகம் என்று கேட்டிருக்கிறார். தேவா ராகங்கள் குறித்த அவ்வளவு புரிதல் இல்லாத காரணத்தால் தெரியவில்லை என்று வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.

அப்போது பாலமுரளி கிருஷ்ணா இது நான் கண்டுபிடித்த ராகம் என்று கூற தேவா வியந்து போயிருக்கிறார். பின்னர் பாடல் பதிவு நடைபெற்ற பிறகு, பாலமுரளி கிருஷ்ணா தேவாவை அழைத்து நான் சொல்வதை தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்தத் தோற்றம் உங்களுக்குப் பொருத்தமாக இல்லை. எனவே வெள்ளை சட்டை, வேட்டி, நெற்றியில் விபூதி, குங்குமம் இருந்தால் தோற்றம் நன்றாக இருக்கும் என்று கூற, அன்றிரவே தேவா அதனை ஏற்பாடு செய்து மறுநாள் காலை பாலமுரளி கிருஷ்ணாவின் முன்னால் போய் நிற்க அவர் மகிழ்ந்திருக்கிறார்.

அன்றிலிருந்து இந்த வெள்ளை ஜிப்பா, சட்டை, பேண்ட் அணிவதையே வழக்கமாக்கிக் கொண்டாராம் இசையமைப்பாளர் தேவா.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...