அங்காடித் தெருவில் மிரட்டிய கருங்காலி.. விஜய், சிம்பு பட இயக்குநராக இத்தனை படங்களா? சரத்குமார் கொடுத்த வாய்ப்பு

ஒரு ஹீரோவுக்கு எப்படி தனது முதல் படத்தில் அவரது வாழ்க்கையே இருக்கிறேதோ அதேபோல்தான் இயக்குநருக்கும். ஒரு இயக்குநர் தான் கொண்ட கதை மேல் மிகுந்த நம்பிக்கை வைத்து பின் அதை அவர் ஹீரோவின் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக எடுக்கும் போது அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் ஒரு நல்ல வரவேற்பினைப் பெறுகிறது.

ஒரு இயக்குநருக்கு இவ்வாறு தான் எடுக்கும் ஒவ்வொரு படமும் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது போன்ற போராட்டம் தான். இப்படியாக தமிழ் சினிமாவில் தனது முதல் திரைப்படத்தை மிகுந்த போராட்டங்களுக்கிடையே எடுத்து இன்று முன்னனி இயக்குநராக இருப்பவர் தான் இயக்குர் ஏ.வெங்கடேஷ்.

வசந்தபாலன் இயக்கிய ‘அங்காடித் தெரு‘ படத்தில் கடையின் மேலாளராக கருங்காலி கதாபாத்திரத்தில் வில்லத்தனம் காட்டி அப்போது ஒவ்வொரு நிறுவனத்திலும் இதுபோன்ற ஊழியர்கள் இருக்கிறார்கள் என்பதை நச் என நெற்றிப் பொட்டில் அடித்தாற் போல் நடித்து பெயர் வாங்கிய நடிகர் தான் வெங்கடேஷ்.

துணை இயக்குநராக ஷங்கர், பவித்ரன், ராஜேஷ்வர் ஆகிய இயக்குநர்களிடம் பணியாற்றி சினிமா கற்று முதன்முதலாக மகாபிரபு படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். சூரியன் படப்பிடிப்பின் போது நடிகர் சரத்குமாருடன் ஏற்பட்ட நட்பு காரணமாக தனது முதல்படத்தில் சரத்குமார் தான் ஹீரோ என்பதில் முடிவாக இருந்து அவருக்காக எழுதிய படம் தான் மகாபிரபு.

இக்கதையை சரத்குமாரிடம் சொல்லி அவர் நடிக்க ஒப்புக் கொண்டபின் படம் தயாராவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் சரத்குமாரும் மளமளவென படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அந்தநேரம் நாட்டாமை படம் வெளியாகி சரத்குமார் புகழின் உச்சியில் இருந்த போது இயக்குநர் வெங்கடேஷ் சரத்குமாரை சந்தித்து இப்போது ஷுட்டிங் எடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.

“நான் பேச நினைப்பதெல்லாம்..” அக்கா தங்கை பாடலை காதல் பாட்டாக்கிய கவியரசர் கண்ணதாசன்

ஆனால் சரத்குமாருக்கு தொடர்ச்சியாக கால்ஷுட் இருந்ததால் அப்போது முடியாது என்று கூறியிருக்கிறார். இதனைக் கேட்டு ஏ.வெங்கடேஷ் தனது நிலையைக் கூறி விநியோகதஸ்கர்கள் உள்ளிட்ட அனைவரும் தயாராக இருக்கிறார்கள். மேலும் நானும் உறுதி கூறி விட்டேன். எனக்கு இதுதான் முதல்படம் என் வாழ்க்கையை உங்களை நம்பித்தான் இருக்கிறது என்று கூற, சரத்குமார் அவரை ஆசுவாசப்படுத்தி படத்தில் நடிப்பதாக ஒப்புக் கொண்டார்.

மேலும் இந்தப் படத்திற்கு எத்தனை நாட்கள் வேண்டும் என்று கேட்க 20 நாட்கள் போதும் என்று வெங்கடேஷ் கூறியிருக்கிறார். ஆனால் சரத்குமார் 20 நாட்கள் சற்று கடினம். 15 நாட்கள் நடித்துத் தருகிறேன் என்று கூற வெங்கடேஷூம் சம்மதித்து உடனடியாக படப்பிடிப்பை ஆரம்பித்து 1 மாதத்தில் மொத்தப் படத்தையும் முடித்து படத்தை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு தனக்கு முதன்முதலாக திரைத்துறையில் வாழ்க்கை கொடுத்த சரத்குமாரை வைத்து இயக்குநர் வெங்கடேஷ் சண்டமாருதம், ஏய் உள்ளிட்ட படங்களைக் கொடுத்தார். மேலும் விஜய்யை வைத்து பகவதி, செல்வா, நிலாவே வா உள்ளிட்ட படங்களையும், அர்ஜுன், சிம்பு, அருண் விஜய், உள்ளிட்ட நடிகர்களையும் வைத்து பல ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார் வெங்கடேஷ்.

சமீபத்தில் வெளியான அசுரன் படத்தில் தனுஷின் முதலாளியாக நடித்து கவனம் ஈர்த்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...