ரோட்டுக்கடை ஸ்டைல் பேல் பூரி 10 நிமிடத்தில் வீட்டுலயே செய்ய முடியுமா?

இந்தியாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் ஒரு உணவுதான் சிற்றுண்டி பேல் பூரி. இதை சுவைக்காத மனிதர்களே இல்லை என்பது போல அணைத்து இடங்களிலும் விற்றாலும் அத வாங்க நாம் தேடி அலைவதுண்டு. இதனால் சிலர் இதை தவறாக பயன்படுத்துகின்றனர். ஆகையால் நமக்கும், குழந்தைகளுக்கும் ஏதுவான எந்த கலப்படம் இல்லாத பேல் பூரி நம்ம வீட்டுலயே அதே ஸ்டைலில் அதே சுவையில் பண்ணலாம்.

bhel

தேவையான பொருட்கள்:

பொரி – 1 கப்
ஓமப்பொடி – 1 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
தட்டுவடை – 4
கடலைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
வேர்க்கடலை – 1 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் – 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
நறுக்கிய மாங்காய் – 1 டேபிள் ஸ்பூன்
வேக வைத்த உருளைக்கிழங்கு – 1/4 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
புதினா/கொத்தமல்லி சட்னி – தேவையான அளவு
தக்காளி சாஸ் – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்
சாட் மசாலா – 1/4 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது

ஆறு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத இன்ஸ்டன்ட் இட்லி மாவு!

செய்முறை:

முதலில் ஒரு சமையல் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும், கடலைப் பருப்பு மற்றும் வேர்க்கடலையை பொன்னிறமாக வறுத்து அதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் பொரி மற்றும் தட்டுவடையை கையால் உடைத்து சேர்த்து, மேலே கொடுக்கப்பட்டுள்ள ஓமப்பொடி,தட்டுவடை,கடலைப்பருப்பு,வேர்க்கடலை,நறுக்கிய வெங்காயம், தக்காளி, நறுக்கிய மாங்காய்,வேக வைத்த உருளைக்கிழங்கு, புதினா/கொத்தமல்லி சட்னி,தக்காளி சாஸ்,மிளகாய் தூள்,சாட் மசாலா,சீரகப் பொடி,கொத்தமல்லி அனைத்துப் பொருட்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். இறுதியில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி மீண்டும் கிளறினால், ரோட்டுக்கடை ஸ்டைல் பேல் பூரி ரெடி.

குழந்தைகளுக்கு வாயில் வைத்ததும் கரையும் ஸ்வீட் கார்ன் அல்வா!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews