அட்லீயை அல்வா போல அள்ளப் பார்க்கும் பாலிவுட் பிரபலங்கள்!.. அம்பானி வீட்டு விசேஷத்துல நடந்த டீலிங்!..

இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனரான அட்லீ ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார்.

தெறி படத்தில் விஜய், சமந்தா மற்றும் எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தெறி படம் கமர்ஷியலாக மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் விஜய்யை வைத்து மெர்சல் படத்தை இயக்கினார் அட்லீ.

அம்பானி வீட்டு திருமண விழாவில் அட்லீ:

தெறி படம் சத்ரியன் மற்றும் பாட்ஷா படங்களின் காப்பி என விமர்சிக்கப்பட்ட நிலையில், மெர்சல் படம் அபூர்வ சகோதரர்கள் படத்தில் காப்பி என கலாய்க்க பட்டது. ஆனாலும், நடிகர் விஜய் அட்டையை நம்பி மூன்றாவது முறையாக பிகில் படத்தை இயக்கும் வாய்ப்பையும் கொடுத்தார்.

ஷாருக்கான் நடித்து வெளியான சக்தே இந்தியா படத்தின் தமிழ் வெர்ஷன் தான் பிகில் என்றும் ஏகப்பட்ட ட்ரோல்கள் சமூக வலைதளங்களில் குவிந்தன. ஆனாலும் பிகில் திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூல் என தகவல்கள் வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் என்றதும் அட்லி இயக்கத்தில் நாம் ஒரு படத்தில் நடிக்கலாமே என நினைத்த ஷாருக்கான் அவரை மும்பைக்கு அழைத்துச் சென்றார்.

பாலிவுட்டில் ஷாருக் கான், தீபிகா படுகோன், நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரை வைத்து அட்லீ கடந்த சில ஆண்டுகளாக இயக்கி வந்த ஜவான் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்தது.

அட்லீக்காக ஏங்கும் பாலிவுட் நடிகர்கள்:

ஷாருக்கான் பதான் படத்தின் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் ஈட்டிய நிலையில், ஜவான் திரைப்படம் அவருக்கு 1100 கோடி ரூபாய் வசூலை பெற்றுத் தந்தது.

அம்பானி வீட்டு திருமணத்தில் அட்லீ தனது குடும்பத்துடன் பங்கேற்ற நிலையில், அந்த விழாவுக்கு வந்த பாலிவுட் நடிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு பேசிய வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரன்வீர் சிங் சொன்ன சூப்பர் விஷயம்:

அப்போது, அட்லீ யை பார்த்த ரன்வீர் சிங், அர்ஜுன் கபூரை அழைத்துக்கொண்டு மும்பை ஹீரோக்கள் எல்லாம் ஸ்லிப்பில் கேட்ச் பிடிக்க நிற்பது போல அட்லீ பிடிக்க காத்துக் கொண்டிருக்கின்றன என பேசிய வீடியோ இந்தியாவில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் அட்லீ அடுத்து அல்லு அர்ஜுன் படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட்டில் வருண் தவான் நடித்து வரும் தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கை அட்லீ தயாரிக்க அவரது உதவி இயக்குனர் காலிஸ் இயக்கி வருகிறார். அந்த படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா காபி நடித்து வருகின்றனர்.

பாலிவுட்டில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் தற்போது அட்லி மிகப்பெரிய அளவில் பல பிரபலங்களை கவர்ந்துள்ள நிலையில், கூடிய சீக்கிரமே ஜவானை விடை மேலும் பிரமாண்ட படங்களை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews