ஆனந்த் அம்பானியின் பேச்சைக் கேட்டு தேம்பி அழுத முகேஷ் அம்பானி…

ஜியோ ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானியின் திருமணம் ராதிகா மெர்ச்சண்ட் உடன் நிச்சயிக்கப்பட்டு வரும் ஜூலை மாதம் 2 ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில் தற்போது குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் ப்ரீ வெட்டிங் நிகழ்வுகள் கோலாகலமாக நடந்தது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த பிரபல தொழிலதிபர்கள், சர்வதசே அரசியல் தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள் என ஜாம்நகர் முழுவதும் வி. ஐ. பிகளால் நிறைந்து காணப்பட்டது.

இந்த நிலையில் நிகழ்ச்சியின் நடுவே ஆனந்த் அம்பானி மேடையில் உருக்கமாக பேசியதை கேட்டுக்கொண்டிருந்த முகேஷ் அம்பானி தேம்பி அழுத வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி காண்போரை நெகிழ வைத்துள்ளது.

ஆனந்த் அம்பானி பேசியது என்னவென்றால், ‘என்னுடைய வாழ்க்கை மலர் படுக்கைகளால் ஆனது அல்ல, முட்கள் நிறைந்த வலிகளை அனுபவித்து இருக்கிறேன். சிறு வயதிலிருந்தே உடல் ரீதியான பிரச்சனைகளை அதிகமாக சந்தித்துள்ளேன். ஆனாலும் என்னுடைய தாய் மற்றும் தந்தை இருவரும் எனக்கு பக்கபலமாக இருந்து என்னை தேற்றினார். நான் மனதால் வருந்திவிடக்கூடாது என்பதற்காக பார்த்துப் பார்த்து கவனித்து கொண்டனர்’ என்று கூறினார். ஆனந்த் அம்பானியின் இந்த உருக்கமான பேச்சைக் கேட்டு தன்னை மீறி முகேஷ் அம்பானி கண்ணீர் சிந்தி தேம்பி அழுதார்.

அதன் பின்பு தன்னை இந்த தருணத்தில் சிறப்பாக உணர வைக்க இந்த நிகழ்ச்சிக்காக கடினமாக உழைத்த தனது தாய், தந்தை, அண்ணன், அண்ணி, அக்கா, மாமா அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார். தங்கள் நேரங்களை ஒதுக்கி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்திய அனைவர்க்கும் நன்றி எனவும் கூறினார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews