அரசியல்வாதிகள் மிரட்டல், சென்சார் கெடுபிடி.. தடைகளை தாண்டி வெற்றி பெற்ற முகமது பின் துக்ளக்..!

சோ நடித்து இயக்கிய முகமது பின் துக்ளக் என்ற திரைப்படம் கடந்த 1971 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தை ரிலீஸ் செய்ய விடக்கூடாது என்று பல அரசியல்வாதிகள் தொல்லை கொடுத்துள்ளனர். அதே போல் சென்சாரிலும் இந்த படத்தில் இடம்பெற்ற பல காட்சிகளை கட் செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் கூறியதாகவும் ஆனால் பல தடைகளை மீறி இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதாகவும் கூறப்பட்டது.

சோ என்றாலே நக்கல் நையாண்டி என்பது அனைவரும் அறிந்ததே. அவரது படங்களில் நகைச்சுவையில் கூட அரசியலை புகுத்தி இருப்பார். அந்த வகையில் முழுக்க முழுக்க ஒரு அரசியல் நையாண்டி செய்யும் திரைப்படம் எடுத்தார் என்றால் அதுதான் முகமது பின் துக்ளக். இந்த கதை ஏற்கனவே நாடகமாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் இந்த கதையை திரைப்படமாக எடுக்க முடிவு செய்தார்.

அவரே இந்த படத்தை இயக்கவும் செய்தார். இந்த படத்தில் நாடகத்தில் நடித்த நடிகர்களே பெரும்பாலும் நடித்திருந்தனர். இவர்களுடன் மனோரமா உள்பட ஒரு சிலர் நடித்திருந்தனர். இந்த படம் தொடங்கும் போது எம்ஜிஆர் திமுகவில் இருந்தார். திமுகவில் ஒரு முக்கிய தலைவராக இருந்தார். திமுக தலைவர்களையும் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியையும் இந்த படம் மிகப்பெரிய அளவில் கேலி செய்தது.

1500 திரைப்படங்கள்.. 14 மொழிகள்.. நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் திரையுலக சாதனை..!

இதனால் இந்த படத்தை தயாரிக்கும் போது எம்ஜிஆர் பல தொல்லைகள் கொடுத்ததாக கூறப்பட்டது . இந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகர்களுக்கு திடீர் திடீர் என போன் வரும் என்றும் போன் வந்தவுடன் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்றும் சோ ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நடிகர் நடிகைகள் மட்டுமின்றி கேமராமேன் கூட அவ்வப்போது காணாமல் போய்விடுவார், அதன் பிறகு உதவி கேமராமேன் வைத்து படம் எடுத்ததாக கூறியுள்ளார்..

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ஒரு வழியாக ரிலீஸ்க்கு தயாரான போது சென்சாரில் பெரிய சிக்கல் ஏற்பட்டது. மத்தியில் அப்போது காங்கிரஸ் ஆட்சி செய்து கொண்டிருந்தபோது இந்திரா காந்தி தலையிட்டு இந்த படத்திற்கு சென்சார் வழங்கக் கூடாது என்று கூறியதாக செய்திகள் வெளியானது.

ஒரு கட்டத்தில் சோ ஒரு மிகப்பெரிய பொதுக்கூட்டத்தைக் கூட்டி அதில் முகமது பின் துக்ளக் படத்தை வெளியிடுவதற்கு சென்சார் அதிகாரிக்கு தந்தி அடிங்கள் என்று கூறியிருந்தார். ஒரே நேரத்தில் பத்தாயிரத்துக்கு அதிகமான தந்திகள் சென்சார் போர்டுக்கு சென்றதாகவும், அதனால் சென்சார் போர்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து இதற்கு மேல் இந்த படத்தை தாமதம் செய்யக்கூடாது என்று 22 கட்களுடன் இந்த படத்தை சென்சார் செய்து கொடுத்தனர்.

அந்த படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அப்படி இருந்தும் முஸ்லிம்களை ஏவி விட்டு இந்த படத்தை நிறுத்துவதற்கு அரசியல்வாதிகள் ஏற்பாடு செய்ததாகவும் ஆனால் முஸ்லிம்கள் இந்த படத்தை பார்க்க சென்றபோது முதல் பாடலான அல்லா அல்லா நீ இல்லாத இடமே இல்லை என்ற பாடலை பார்த்ததும் படத்தை அவர்கள் கொண்டாடினதாகவும் சோ ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

பாரதிராஜா இயக்கத்தில் ஒரே ஒரு படம் நடித்த குஷ்பு .. லாஜிக் இல்லாமல் போன கேப்டன் மகள்..!!

இன்றைய தலைமுறையினர் மீம்ஸ்கள் நையாண்டி செய்வது போல் அரசியலை நையாண்டி செய்யும் வகையில் இந்த படம் உருவானது. கேலி, கிண்டல் வசனங்களால் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது .

குறிப்பாக தேர்தலில் போட்டியிட்டு பிரச்சாரம் செய்வது, பிரச்சாரத்தின் போது செய்யும் முறைகேடுகள், கட்சி தாவுவது, இலாகா இல்லாத அமைச்சர்களை நியமனம் செய்வது, 450 உதவி பிரதமர்களை அறிவிப்பது, பாரசீகத்தை ஆட்சி மொழியாக கொண்டு முடிவெடுப்பது, லஞ்சத்தை ஒழிப்பதற்கு அதை சட்டரீதியாக்குவது, ஒவ்வொரு அரசு அதிகாரிகளும் எவ்வளவு லஞ்சம் பெற வேண்டும் என்பதை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது என சோவின் அரசியல் நையாண்டி அமர்க்களமகா  இருக்கும்.

அதேபோல் சோ குதித்து குதித்து நடப்பதும் அவரது முட்டாள்தனமான செயல்களால் நாடே சிக்கலில் இருப்பதும், 23ம் புலிகேசி படத்திற்கு முன்னோடியாக இருந்தது. இந்த படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்து கொண்டிருந்தபோது அவருக்கும் எம்ஜிஆர்ரிடமிருந்து மிரட்டல் வந்தது. ஆனால் மிரட்டலை கண்டு அஞ்சாமல் அவர் இந்த படத்திற்கு இசையமைத்துக் கொடுத்ததாகவும் கூறப்பட்டது.

பெரும் நஷ்டத்திலிருந்த சரத்குமார்.. ராதிகா என்ன செய்தார் தெரியுமா?

இந்த படத்தில் நான்கு பாடல்களும் இடம் பெற்றுள்ள நிலையில் அல்லா அல்லா என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. மேலும் இந்த பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன் பாடியிருந்தார் என்பது கூடுதல் தகவல். இந்த படத்தை ஆனந்த விகடன் உள்பட பல ஊடகங்கள் கொண்டாடின. இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ற படம் என்று பாராட்டின.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...