தனது நெருங்கிய தோழியை கரம் பிடிக்கிறார் ‘முதல் நீ முடிவும் நீ ‘ நாயகன் கிஷன்தாஸ்… இன்ஸ்டாவில் போட்டோக்களை பகிர்ந்து அறிவித்தார்…

‘முதல் நீ முடிவும் நீ’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, முதல் படத்திலேயே பிரபலமானவர் நடிகர் கிஷன்தாஸ். 2022 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனரான தர்புகா சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘முதல் நீ முடிவும் நீ ‘. ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்தில் வரும் ‘முதல் நீ முடிவும் நீ’ என்ற பாடல் மெகாஹிட் ஆனது. தர்புகா சிவா அவர்களே இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீர் பாரத் ராம் இப்படத்தை தயாரித்திருந்தார். நடிகை மீதா ரகுநாத் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகி அனைவரின் கவனத்தை ஈர்த்தார். இதன் மூலம் அடுத்ததடுத்து பட வாய்ப்புகள் மீதா ரகுநாத்தை தேடி வந்தது.

90 களில் படிக்கும் மாணவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இப்படம் காட்டியது. நண்பர்களுக்கு இடையே இந்த படத்தின் கதையம்சம் இருக்கிறது. அதில் கதாநாயகனும் நாயகியும் காதலிக்கின்றனர். இருவருக்கும் சண்டை வருகிறது. அதன் பின்பு டைம் ட்ராவல் என்ற ஒன்றை இயக்குனர் காட்டியிருப்பார். அந்த வாழ்க்கையை பார்த்து விட்டு நாயகன் மீண்டும் பழைய வாழ்க்கைக்கு திரும்புகிறான். அடுத்து என்ன நடக்கும் என்பது மீதி கதை. இந்த படம் பெரும்பாலும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில், நடிகர் கிஷன்தாஸ் தனது நெருங்கிய தோழியை கரம் பிடிக்க உள்ளார். தனது நெருங்கிய தோழியுடன் நிச்சயதார்த்தம் ஆன புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து தனது ரசிகர்களுக்கு அறிவித்திருக்கிறார்.

அந்த போஸ்டில், அவள் எனக்கு நோ சொல்லவில்லை. நிஜமான திருச்சிற்றம்பலம் படம் எனது வாழ்க்கையில் நடந்துவிட்டது. நான் எனது நெருங்கிய தோழியுடன் எங்கேஜ் ஆகிவிட்டேன் என்று பதிவிட்டிருந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.