எம். ஆர். ராதா குடும்பத்தில் இருந்து வந்து தடம் பதித்த நடிகர்.. இவர் இத்தனை படத்துல நடிச்சுருக்காரா?

நடிகவேள் எம்.ஆர். ராதாவின் வாரிசுகள் பலர் திரையுலகில் ஜொலித்து வருகின்றனர் என்பது பலரும் அறிந்த செய்தி தான். அதில் குறிப்பாக எம்ஆர்ஆர் வாசு, ராதாரவி, ராதிகா, நிரோஷா உள்ளிட்டோர் பல படங்களில் நடித்துள்ளார்கள் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் எம்ஆர் ராதாவின் பேரன் அதாவது எம்ஆர்ஆர் வாசுவின் மகன் வாசு விக்ரமை படங்களில் பார்த்திருந்தாலும் அவரை பற்றிய தகவல்கள் பலருக்கும் தெரியாதவை ஆகும்.

கடந்த 1988 ஆம் ஆண்டு பாலைவனத்தில் பட்டாம்பூச்சி என்ற திரைப்படத்தில் தான் வாசு விக்ரம் அறிமுகமானார். இதனையடுத்து அவர் ஒரு சில படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்த நிலையில் கார்த்திக் நடித்த விக்னேஷ்வர் என்ற திரைப்படத்தில் குறிப்பிட்ட கேரக்டரில் நடித்தார்.

இதன் பின்னர் தையல் காரன், விஜயகாந்த் நடித்த பரதன், இது நம்ம ஊரு, இளைஞர் அணி, மஞ்சுவிரட்டு, சக்திவேல், செவத்த பொண்ணு, சிந்து நதி பூ, பொங்கலோ பொங்கல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பெரும்பாலான படங்களில் அவர் காமெடி மற்றும் வில்லத்தனமான கேரக்டர்களிலும் நடித்து கவனம் ஈர்த்திருந்தார்.

vasu vikram1

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாபா, படையப்பா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அவர் அதன் பிறகு அஜித் நடித்த வில்லன், விஜய் நடித்த வசீகரா, சரத்குமார் நடித்த சத்ரபதி, உள்ளிட்ட படங்களில் நடித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான சிவாஜி திரைப்படத்தில் நடிகர் வாசு விக்ரம் எம்எல்ஏ கேரக்டரில் நடித்திருந்ததுடன் கொஞ்ச நேரம் வந்தாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவரது நடிப்பும், கதாபாத்திரமும் அமைந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்த லிங்கா, அசோக் செல்வன் நடித்த சவாலே சமாளி, அட்லி தயாரிப்பில் உருவான ’சங்கிலி புங்கிலி கதவை திற’ வஞ்சகர் உலகம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரையுலகில் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் வாசு விக்ரம் நடித்துள்ளார். குறிப்பாக சித்தி திரைப்படத்தில் வேலுமணி என்ற கேரக்டரில் நடித்திருப்பார். அதேபோல் சின்ன பாப்பா பெரிய பாப்பா, சூரிய வம்சம், பொறந்த வீடா புகுந்த வீடா, வாணி ராணி, அழகு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார். எம்ஆர் ராதாவின் கலை குடும்பத்தில் பிறந்த வாசு விக்ரம் தனது முன்னோர்களை பின்பற்றி திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள நிலையில் இன்னும் அவருக்கு கேரக்டர்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.