என் நடிப்பு நல்லா இல்லையா.. குறை சொன்ன இயக்குனர் வீட்டிற்கு நேரா போய் எம். ஆர். ராதா சொன்ன விஷயம்..

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் என படு பயங்கரமான நடிகர்கள் டாப்பில் இருந்த சமயத்தில் தனது நடிப்பின் மூலமும் தனக்கான ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர் தான் நடிகர் எம். ஆர். ராதா. காமெடி, வில்லத்தனமான கதாபாத்திரம், முன்னணி நடிகர் என அனைத்து பரிமாணங்களிலும் நிறைய திரைப்படங்கள் நடித்துள்ள எம். ஆர். ராதாவின் திரை பயணத்தில் நிறைய சர்ச்சை சம்பவங்களும் கூட அரங்கேறாமல் இல்லை.

ஆனாலும், அவர் நடிக்கும் திரைப்படங்களில் சில நல்ல குணங்களும் அவரிடம் இருந்துள்ளது. தன்னுடைய காட்சிகள் ஷூட்டிங் முடிந்து விட்டால் அப்படியே ஒதுங்கிப் போய் இருப்பவர் கிடையாது எம் ஆர் ராதா. சக நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடிக்கும் காட்சியையும் உன்னிப்பாக கவனித்து அவர்களுக்கான சிறந்த அறிவுரை கொடுத்து அவர்களின் நடிப்பை மேம்படுத்தவும் முயற்சி செய்பவர் தான்.

அந்த அளவுக்கு நல்ல குணம் படைத்தவராக இருந்த நடிகர் எம். ஆர். ராதா, ஒரு காலத்தில் படு பிஸியான நடிகராகவும் இருந்துள்ளார். ஒரே சமயத்தில் இரண்டு முதல் மூன்று திரைப்படங்களுக்கு டேட் கொடுத்து நடித்து வந்த எம் ஆர் ராதா, அந்த சமயத்தில் பிரபல இயக்குனரான கே. சங்கர் இயக்கத்தில் உருவான கைராசி என்னும் திரைப்படத்திலும் நடித்து வந்தார்.

இந்த படத்தின் படப்பிடிப்புக்காக குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி கலந்து கொண்டு வந்த எம் ஆர் ராதா, படத்தின் வசனங்கள் மற்றும் காட்சிகளை அசிஸ்டன்ட் இயக்குனர் ஒருமுறை சொல்ல கேட்டு அதை அப்படியே தயார் செய்து கொண்டும் நடித்தார். அப்படி அவர் தயாராகி நடித்த காட்சியின் படப்பிடிப்பு நடைபெற எம் ஆர் ராதா முதல் முறை நடித்த போது அது இயக்குனர் சங்கருக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது.

இதனால் மீண்டும் ஒரு முறை எம் ஆர் ராதா அந்த காட்சியில் நடிக்க வைத்த போதும் அதிலும் சங்கருக்கு முழு திருப்தி ஏற்படவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றது. ஆனால் எம் ஆர் ராதா மிகப்பெரிய நடிகன் என்பதால் மீண்டும் ஒரு முறை ஒன் மோர் சொல்லி நடிக்க வைக்கவும் கே சங்கருக்கு விருப்பம் இல்லாமல் போயுள்ளது.

ஆனால் இது பற்றி எம் ஆர் ராதாவின் மேக்கப் மேனிடம் தனது அதிருப்தியை வெளிப்படையாகவே கே சங்கர் கூறியுள்ளார். இது பற்றி எம் ஆர் ராதாவிடம் பின்னர் இந்த மேக்கப் மேன் கூற, இதனை அறிந்து அதிர்ந்து போயுள்ளார் ராதா. தான் நன்றாக நடிக்காத போதும் ஏன் கே சங்கர் மீண்டும் நடிக்க வைக்கவில்லை என்ற கேள்வி அவர் மண்டைக்குள் ஓட, நேரடியாக காரில் சென்று இயக்குனரின் வீட்டில் இறங்கி உள்ளார் ராதா.

அப்போது கைராசி படத்தில் தயாரிப்பாளர் வாசு மேனனும் அங்கே இருந்ததாக தெரிகிறது. நேரடியாகவே சங்கரிடம் ஏன் மீண்டும் ஒருமுறை ஒன்மோர் நடிக்க சொல்லவில்லை என கேள்வி கேட்டதுடன் அன்று மாலை மீண்டும் அந்த காட்சியை இயக்குனருக்கு பிடித்தது போல நடித்து தருவதாகவும் வாக்குறுதி கொடுத்தார்.

அத்துடன் அதே தினம் மாலை, நேரடியாக சூட்டிங் ஸ்பாட் சென்று இயக்குனர் கே சங்கர் நினைத்ததை விட இன்னும் பல மடங்கு அதிக நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார் எம் ஆர் ராதா. அத்துடன் தன்னால் மீண்டும் அந்த காட்சி படமாக்கப்பட்டதால், அதற்காக செலவு செய்த பணத்தையும் தயாரிப்பாளர் வாசு மேனன் கையில் கொடுத்தார் எம். ஆர். ராதா.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.