மெளன ராகம் படத்தில் மிஸ்டர் சந்திரமெளலி ஞாபகம் இருக்கிறதா? நடிகர் ரா சங்கரனின் திரையுலக பயணம்!

Ra Sankaran: மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக், ரேவதி, மோகன் நடித்த மௌனராகம் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில்  ரேவதி தந்தையாக நடித்த ரா. சங்கரன் அவர்களை மறக்கவே முடியாது. அவரது பெயர் பலருக்கு ஞாபகம் இருக்காது என்றாலும் அவரை மிஸ்டர் சந்திரமௌலி என்று கார்த்திக் கூப்பிடும் காட்சியை இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் மறக்க முடியாது.

ராமரத்தினம் சங்கரன் என்ற பெயரைத்தான் ரா. சங்கரன் என்று சுருக்கி கூப்பிடுவார்கள். கடந்த 1931ஆம் ஆண்டு பிறந்த இவர் ஏராளமான தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவர் பழம்பெரும் நடிகர் ஜாவர் சீதாராமன் அவர்களுக்கு நெருங்கிய உறவினர் ஆவார்.

வளையல் கடைக்காரரில் இருந்து ஹீரோ வரை… பாரதிராஜா அறிமுகப்படுத்திய பாண்டியன்…!!

நடிகராக மட்டுமின்றி இவர் ஒரு சில படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக சிவக்குமார், கமல்ஹாசன் நடித்த ‘தேன் சிந்துதே வானம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும் தூண்டில் மீன்,  வேலும் மயிலும் துணை, குமரிப் பெண்ணின் உள்ளத்திலே உள்பட ஒரு சில படங்களை இயக்கியுள்ளார்.

கடந்த 1962ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழில் நடிகர் ரா.சங்கரன் அறிமுகமானார். இந்த படத்தை அடுத்து அவர் புதுமைப்பெண், ஒரு கைதியின் டைரி, பகல் நிலவு, பௌர்ணமி அலைகள், மௌன ராகம், உனக்காகவே வாழ்கிறேன், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மக்கள் என் பக்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஏராளமான படங்களில் நாயகன் அல்லது நாயகியின் தந்தையாக அல்லது தாத்தாவாக நடித்திருப்பார்.

இவர் ஒரு முழு திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும் தனது உருக்கமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து விடுவார். அதுதான் இவரது நடிப்பின் ரகசியம். சேவகன் படத்தில் அஞ்சலியின் தந்தையாகவும், சின்ன கவுண்டர் படத்தில் வழக்கறிஞராகவும், அமராவதி படத்தில் சர்ச் ஃபாதராகவும், ரோஜாவை கிள்ளாதே படத்தில் அனுவின் தந்தையாகவும், சின்ன மேடம் படத்தில் நீதிபதியாகவும் நடித்திருப்பார். வாங்க பார்ட்னர் வாங்க படத்தில் குருக்களாகவும், காதல் கோட்டை படத்தில் சர்ச் ஃபாதராகவும் நடித்துள்ளார்.

ஒரே நாளில் வெளியான 3 மோகன் படங்கள்.. மூன்றும் வெற்றி.. ரஜினி, கமல் கூட செய்யாத சாதனை..!

எந்த வேடம் போட்டாலும் இவருக்கு மிக பொருத்தமாக இருக்கும் என்பதால் இவரை பல இயக்குனர்கள் தங்களது படங்களில் பயன்படுத்தி உள்ளனர். நடிகர் ரா. சங்கரன் 1999ஆம் ஆண்டு சத்யராஜ், ரோஜா நடித்த அழகர்சாமி என்ற படத்தில் நடித்த பின்னர் வேறு தமிழ் படங்களில் நடிக்கவில்லை. பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம் உள்பட பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்த இவரது நடிப்பு என்றும் ரசிகர்களின் மனதை விட்டு நீங்காது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...