பணம் பொருளின் மதிப்பை அளவிட மட்டுமே!

பணம் என்பது ஒரு பொருளுக்கான மதிப்பை குறிக்க மட்டுமே.   நிஜமாக சொல்ல வேண்டுமென்றால் அது ஒரு பெரும் குழப்பத்தை தீர்த்துக்கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம். எவ்வாறாயினும், ஒரு பொருளின் மதிப்பு எப்பொழுதும் பணத்தால் மட்டும் குறிப்பிட முடியாது. அது ஒரு கருவியே  தவிர அதுவே அந்த பொருளாகாது.

ஒரு ரூபாய்க்கு வாழைப்பழம் வாங்கினால், அந்த ஒரு ரூபாய் நாம் வாங்கும் வாழைப்பழத்திற்கு கொடுக்கும் ஒப்புதலை குறிக்கிறது. வாழைப்பழங்கள் பற்றாக்குறை இருந்தால், அதை வாங்குவதற்கு அதிக செலவாகும். மிதமிஞ்சிய வாழைப்பழங்கள் இருந்தால், அவற்றின் விலை குறைவாக இருக்கும்.

எத்தனை ரூபாய் கொடுத்து வாங்குகிறோம் என்றாலும் இங்கு மதிப்பு அந்த வாழைப்பழத்திற்கே தவிர அந்த பணத்திற்கு அல்ல.

இங்கு நாம் அறிய வேண்டியது என்னவென்றால், பொருள்கள் அனைத்தும் இந்த உலகத்தில் இலவசமாக கிடைக்குமென்றால் இந்த பணம் என்பது வெறும் காகிதமே. அதற்காக அடித்துக் கொள்ள யாரும் வர மாட்டார்கள்.

அதே சமயம் இங்கு நமக்கு பணத்தைத் தவிர தேவையான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றால் எத்தனை கோடி இருந்தாலும் அந்த பணத்திற்கு மதிப்பில்லை என்பதை அனைவரும் உணர்ந்தாலே போதும்.

 

Published by
Staff

Recent Posts