கோட் படப்பிடிப்பு தளத்தில் மோகன், சினேகா!.. ஊர் கண்ணே பட்டுடும் போல இருக்கே.. செம ஸ்டில்!..

GOAT திரைப்படத்தில் நடிகை சினேகா அப்பா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்று தகவல்கள் வெளியானது. அந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தற்போது நடைபெற்று வருகிறது. விமான காட்சிகள் எல்லாம் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட நிலையில், மகன் விஜய்யின் காட்சிகள் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு சூப்பரான ஜோடி போட்டோ வெளியாகி இருக்கிறது.

நடிகை சினேகா விஜய்க்கு ஜோடியாக வசீகரா படத்தில் நடித்திருந்தார். ரொமான்டிக் காமெடி திரைப்படமாக வெளியான அந்த படத்தில் சினேகாவுக்கு விஜய் மேல் இருக்கும் காதல் மற்றும் பொசஷிவ்னஸை அழகாக வெளிப்படுத்தி இருப்பார். அந்த படத்திற்கு பிறகு மீண்டும் சினேகா விஜய்யுடன் பல வருடங்களாக நடிக்கவே இல்லை. இந்நிலையில், வெங்கட் பிரபு படங்களில் தொடர்ந்து கோவா, சாட் பூ த்ரீ என நடித்து வரும் சினேகா கோட் படத்தில் விஜய்யுடன் மீண்டும் இணைந்து நடித்து வருகிறார்.

கோட் படத்தில் மோகன், சினேகா:

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் பட சூட்டிங் பாண்டிச்சேரியில் நடைப்பெற்று வருவதால் அங்குள்ள ரசிகர்களை சந்தித்து செல்ஃபி எடுத்து கலக்கி வருகிறார் விஜய். பாண்டிச்சேரியிலேயே அத்தனை ரசிகர்கள் என்றால், விஜய் அரசியலில் நடத்தும் கூட்டதிற்க்கு எத்தனை ரசிகர்கள் குவியப்போகிறார்களோ என ரசிகர்கள் மட்டுமின்றி பல அரசியல் தலைவர்களே ஆடிப் போயுள்ளனர்.

மெல்ல திறந்தது கதவு ,மௌனராகம், 100வது நாள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பெண் ரசிகைகளை அதிகமாக கவர்ந்த மோகன் பல ஆண்டுகளாக திரைதுரையை விட்டு விலகி இருந்த நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் கோட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மோகன் நடித்த படங்களில் அவருக்கு டப்பிங் கொடுத்த குரலை கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்பது போல் இருக்கும் . விஜய்யின் தாய் மாமனான எஸ்.என் சுரேந்தர் தான் அந்த குரலுக்கு சொந்தக்காரர். மோகன் படத்திற்கு எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடல்களை பாடியிருப்பார். ஆனால், மோகனே பாடியது போல மெய்மறந்து நின்ற ரசிகர்கள் எக்கச்சக்கம்.

வைரலாகும் புகைப்படம்:

நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கிய மோகன் நடிகை சினேகாவின் தோள் மீது கை போட்டு நிற்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அதை பார்த்த ரசிகர்கள் மோகனுக்கு தான் சினேகா ஜோடியாக இருப்பாரோ என்று சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர்.

மோகன் மற்றும் சினேகாவின் ஜோடி பொருத்தம் சூப்பர் என்றும் இவர்கள் இருவரும் சீக்கிரமே ஒரு படத்தில் சேர்ந்து நடிக்கலாம் என்றும் இந்த படத்தில் வெங்கட் பிரபு என்ன மேஜிக் செய்து வைக்கப் போகிறாரோ என ரசிகர்கள் ஆர்வத்தை அதிகரித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.