அந்த ஃபீலிங் இருக்கே!.. அது வேறலெவல்.. யாரடி நீ மோகினி இயக்குநருக்கு மீண்டும் கிடைத்த FDFS அனுபவம்!..

தனுஷ், நயன்தாரா நடிப்பில் கடந்த 2008ம் ஆண்டு மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியான யாரடி நீ மோகினி திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரீ ரிலிஸ் செய்யப்பட்டது. இந்நிலையில் அப்படத்தை இயக்குநர் மித்ரன் ஜவஹர் தியேட்டரில் அமர்ந்து ரசிகர்களுடன் பார்த்து சந்தோஷமடைந்தார்.

ரீ ரிலீஸான யாரடி நீ மோகினி:

செல்வராகவன் தெலுங்கில் வெங்கடேஷ் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான ஆடவாரி மாட்டலக்கு அர்த்தாலு வேருலே படத்தை இயக்கியிருந்தார். செல்வராகவனின் உதவி இயகுநரான மித்ரன் ஜவஹர் அப்படத்தை தமிழில் தனுஷ் மற்றும் நயன்தாராவை வைத்து யாரடி நீ மோகினி படத்தை இயக்கினார். முழுக்க முழுக்க காதல் கதையாக உருவான இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மித்ரன் யாரடி நீ மோகினியை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் குட்டி, உத்தமபுத்திரன் மற்றும் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

யாரடி நீ மோகினி படத்தில் ஹீரோ வெகு நாட்களாக வேலைத் தேடிக்கொண்டிருக்கிறார். ஹீரோ அதிஷ்டவசமாக அவர் பார்த்து ஆசை பட்ட பெண் வேலை செய்யும் இடத்திலேயே இண்டர்வியூக்கு செல்கிறார் அவரது முயச்சியை பார்த்த அந்த பெண் அவருக்கு கூடுதலான மார்க் போட்டு வேலைக்கு சேர்த்து விடுகிறாள்.

தியேட்டரில் ரசிகர்களுடன் மித்ரன் ஜவஹர்:

பின்னர் அவர் தன் காதலை அந்த பெண்ணிடம் கூறும்போது, அவள் தனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துவிட்டது என்பதை சொல்கிறாள். அவர் தந்தை தன் மகன் வருத்தமாக இருப்பதை பார்த்து அந்த பெண்ணிடம் பேச சென்ற போது அவரை திட்டியது மட்டுமல்லாமல் அவரை தெரியாமல் அறைந்தும் விடுகிறாள். வீடிற்கு வந்து மகனுடன் குடித்து விட்டு தூங்கிய தந்தை காலையில் இறந்துவிடுகிறார். தந்தையை இழந்த சோகத்தை சரி செய்ய அவன் நண்பன் தன் திருமணத்திற்காக அழைத்து செல்கிறான். அப்போது தான் தெரிகிறது தான் காதலித்த பெண் தான் நண்பனின் மனைவியாக போகும் பெண் என்று, அந்த பெண்ணை நண்பனுக்காக விட்டு கொடுப்பாரா இல்லை தானே திருமணம் செய்து கொள்வாரா என்கிற விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் யாரடி நீ மோகினி படம் உருவாகி இருக்கும்.

தற்போது வெளிவரும் படங்கள் சரியாக ஓடாததால் பழைய வெற்றிப் படங்களை தியேட்டரில் ரீ ரிலிஸ் செய்து பணத்தை சம்பாதிக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் கமலா சினிமாஸ் யாரடி நீ மோகினி படத்தையும் மார்ச் 1ம் தேதியான இன்று ரீ ரிலிஸ் செய்துள்ளது.

மேலும் கமலா தியேட்டர் உரிமையாளர் படத்தின் இயக்குநரே இங்கே பின் சீட்டில் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார் என கை காட்ட, அனைத்து ரசிகர்களும் எழுந்து நின்று மித்ரன் ஜவஹருக்கு கைதட்டி பாராட்டுக்களை தெரிவித்தனர். இயக்குநர் எல்லோரையும் பார்த்து மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீருடன் கையெடுத்து வணங்கினார். மேலும் உங்கள் அனைவரின் அன்பிற்கும் பாசத்திற்கும் மிக்க நன்றி என பதிவிட்டுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...