மிதுனம் சனி பெயர்ச்சி ராசி பலன் 2023-2024!

மிதுன ராசி அன்பர்களே சனி பெயர்ச்சியினைப் பொறுத்தரை சனி பகவான் 9 ஆம் இடத்தில் இட அமர்வு செய்கின்றார். அஷ்டம சனி விலகுகின்றது. இதனால் உங்கள் வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றங்கள் ஏற்படும். மாசி மாதம் முடிந்த பின் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மாற்றங்களையும், ஏற்றங்களையும் கண்கூடாகப் பார்க்கலாம்.

திடீர் அதிர்ஷ்டம் பெரிய யோகத்தினை ஏற்படுத்திக் கொடுக்கும், சுப காரியங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். பிள்ளைகள் விஷயத்தில் நீடித்த தடைகள், இழுபறிகள் சரியாகும். பழைய கடன்களை மே மாதத்திற்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாக அடைப்பீர்கள்.

எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் பலவும் கைகொடுக்கும். வழக்குப் போன்ற பிரச்சினைகள் உங்களுக்குச் சாதகமானதாக இருக்கும். வண்டி, வாகனங்கள் வாங்க நினைத்து இருந்தோர் வண்டி வாகனங்களை மாற்றி புது வண்டி, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

பொருளாதாரரீதியாக கடந்த காலங்களில் இருந்த முடக்கங்கள் நீங்கி ஓரளவு பணப் புழக்கம் இருக்கும். பெற்றோர், பெரியோர்களுடன் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். தாய்- தந்தை உடல் நலனில் அக்கறை காட்டுங்கள்.

உடன் பிறப்புகளுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் மனக் கசப்புகளையும், உறவில் விரிசலையும் ஏற்படுத்திவிடும். பூர்விகம் சார்ந்த சொத்துகளை விற்றுப் பணமாக்குவீர்கள். குடும்ப விஷயங்களில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்கள் ஒருவொருக்கொருவர் வீண் வாக்குவாதங்கள் செய்யாதீர்கள்.

கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பின் நல்ல காலம் ஆரம்பிக்கையில் தேவையற்ற பேச்சுகளால் நீங்களே மன நிம்மதியினைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

கடந்த கால அனுபவங்களே உங்களை சிறப்பாக வழிநடத்தும். பாக்கிய ஸ்தானத்திற்குச் சனி பகவான் செல்வதால் பலவகையான பாக்கியங்களைக் கொடுப்பார்.

உழைப்புக்கேற்ற உயர்வினைப் பெறுவீர்கள். தொழிலில் சிறு சிறு மாற்றங்களைச் செய்து லாபத்தினைப் பார்ப்பீர்கள். உழைப்பு உழைப்பு என்று உடல் ஆரோக்கியத்தினைப் பார்த்துக் கொள்ளத் தவறிவிடாதீர்கள்.

2024 உங்களுக்கு எப்படி இருக்கும்? புத்தாண்டு பலன்கள் இதோ!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.