மிதுனம் ஆடி மாத ராசி பலன் 2023!

ஆடி மாதத்தினைப் பொறுத்தவரை சூர்யன் சிம்ம ராசிக்குப் பெயர்கிறார்; சுக்கிரன் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்; புதன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

மிதுன ராசி அன்பர்களே! புதன் பகவானின் பெயர்ச்சிக்குப் பின்னர் தன்னம்பிக்கை குறைவதாக உணர்வீர்கள். பண விவகாரங்கள் ரீதியாகச் செலவினங்கள் அதிக அளவில் ஏற்படும். இளைய சகோதரருக்குச் செலவுகள் ஏற்படும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

சுக்கிரன் ராசிக்கு 3 ஆம் இடத்தில் மறைந்து, 2 ஆம் இடத்திற்குப் பெயர்ந்து சாதகமான பலனை ஏற்படுத்துகிறார். செலவினங்கள் ஒருபுறம் ஏற்பட சுக்கிர பகவானின் இடப் பெயர்ச்சியால் நன்மையும் மற்றொருபுறம் ஏற்படும்.

வாக்குவாதங்கள் குடும்பத்தில் இருக்கும்; மேலும் அநாவசியமான பேச்சுகள் உங்களுக்கு நேர விரயத்தினை ஏற்படுத்துவதோடு பல தேவையற்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.

நிதானத்தைக் கடைபிடித்தால் மட்டுமே வரவிருக்கும் பல பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். மூன்றாம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் பெயர்ச்சியாகி 2 ஆம் இடத்திற்கு வருகிறார்; சுக்கிரன்- சூர்யன் சேர்க்கை லாபத்தினை ஏற்படுத்திக் கொடுக்கும்.

குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே வாக்குவாதங்கள் ஏற்படும்; ஆனால் அது உடனடி சமாதானத்திற்கு வரும். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை வேலை மாற்றம், இடமாற்றம், பதவி மாற்றம் என நீங்கள் நினைத்த விஷயங்கள் ஈடேறும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

ஆரோக்கியரீதியாக பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் இல்லை; ஆனால் வண்டி வாகனங்கள் ரீதியாகச் செலவினங்கள் ஏற்படும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews