பட வாய்ப்பு இல்லாமல் தவித்த எம்ஜிஆர்! கை கொடுத்து உதவிய சிவாஜி கணேசன்!

நடிகர் திலகம் சிவாஜி ஒரு படத்தில் பணியாற்றும் பொழுது அவருடன் இணைந்து பணியாற்றும்  மிகச்சிறிய கதாப்பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களையும் நல்ல மதிப்புடன் நடத்துவார் என்பது நாம் அறிந்த தகவல். தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களைப் போலவே தனக்கு போட்டியாக திரை உலகில் வலம் வரும் சக ஹீரோக்களுடனும் நடிகர் சிவாஜி மிக மரியாதை உடன் பழகி வருவார். அந்த வகையில் பட வாய்ப்பு இழந்து தவித்து வந்த எம்ஜிஆருக்கு நடிகர் திலகம் சிவாஜி ஒரு திரைப்படத்தை சிபாரிசு செய்ததாக ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது இது குறித்த முழு தகவல் தொகுப்பையும் பார்க்கலாம்.

நடிகர் சிவாஜி சிபாரிசு செய்த அந்த ஒரு திரைப்படம் 1954 ஆம் ஆண்டு இராமுலு நாயுடு இயக்கத்தில் நடிகர் எம் ஜி ஆர் மற்றும் பானுமதி நடிப்பில் வெளியான மலைக்கள்ளன் திரைப்படம். தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த கிளாசிக் திரைப்படமான மலைக்கள்ளன் திரைப்படத்தின் கதை ஏற்கனவே கல்லூரி பாடத்திட்டங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனால் இந்த கதையை படமாக எடுக்க வேண்டும் என இயக்குனர் இராமுலு நாயுடு முடிவெடுத்தார். அதன்பின் அன்றைய காலத்தில் முன்னணி நடிகராக பிஸியாக நடித்து வந்த நடிகர் சிவாஜியை இந்த படத்தில் நடிக்க வைக்கலாம் என நினைத்துள்ளார். அதற்காக சென்னை வந்து நடிகர் சிவாஜி இடம் கால்ஷீட் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது நடிகர் சிவாஜி பத்திற்கு மேற்பட்ட திரைப்படங்களில் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருந்தார். மேலும் இந்த படங்களை முடித்துவிட்டு அடுத்தடுத்த படங்களிலும் நடிப்பதற்கான ஒப்புதல்களை வழங்கியிருந்தார்.

நடிகர் சிவாஜி மிக பிஸியாக இருந்த காரணத்தினால் இந்த படத்தில் நடிக்க முடியாது என மறுத்துவிட்டார். சிவாஜியின் காரணங்களை புரிந்து கொண்ட இராமுலு நாயுடு இதற்கு தீர்வு ஒன்றை கூறும்படி சிவாஜி இடம் கேட்டிருந்தார். அதற்கு நடிகர் சிவாஜி சற்றும் தயங்காமல் அண்ணன் எம்ஜிஆரை இந்த படத்தில் நடிக்க வையுங்கள் இந்த கதைக்கு அவர் பொருத்தமாக இருப்பார் என கூறினார். அந்த நேரத்தில் நடிகர் எம் ஜி ஆர் படம் வாய்ப்பு இன்றி இருந்த காலம், இந்த கதையும் எம்ஜிஆர் இடம் சென்றது. எம்ஜிஆருக்கு கதை மிகவும் பிடித்துப் போக படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். அதன் பின் எம்ஜிஆருக்கு ஜோடியாக பானுமதி இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தின் கதை நாமக்கல் கவிஞரின் வாழ்க்கையை மையமாக வைத்து அமைந்திருக்கும்.

படப்பிடிப்பில் அவமானப்படுத்திய நடிகை! பல வருடங்கள் கழித்து பழிவாங்கிய எம்ஜிஆர்!

இந்த படத்தில் எம்ஜிஆர் ஹீரோவாக நடிப்பதில் மேலும் ஒரு பிரச்சனை ஏற்பட்டிருந்தது. அதாவது இராமுலு நாயுடு நடிகர் எம் ஜி ஆர் இடம் நான் இந்த திரைப்படத்தை தயாரிப்பு மற்றும் இயக்கம் செய்கிறேன். இந்த படத்திற்கு கலைஞர் கருணாநிதி வசனம் எழுதினால் சிறப்பாக இருக்கும் எனக் கூறியுள்ளார். உடனே எம்ஜிஆரும் கலைஞரிடம் சென்று இந்த படத்திற்கு வசனம் எழுதும்படி வேண்டுகோள் வைத்துள்ளார். அதற்கு கருணாநிதி இந்த படத்தின் கதை நாமக்கல் கவிஞரின் வாழ்க்கை கதை. அவர் ஒரு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதிநிதி. நான் திராவிட கட்சியை சேர்ந்தவன். இந்த படத்திற்காக நான் வசனம் எழுதும் பொழுது இருவருக்கும் இடையே ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் அதன் விளைவுகள் ஆபத்தாக இருக்கும். இந்த காரணத்தினால் வசனம் எழுதுவதை கருணாநிதி மறுத்துள்ளார்.

உடனே அந்த நேரத்தில் எம்ஜிஆர் எனக்கு இப்பொழுது எந்தவித பட வாய்ப்பு இல்லை. இந்த ஒரு படம் மட்டும்தான் கையில் உள்ளது தயவு கூர்ந்து இந்த படத்திற்கு வசனங்கள் எழுதி தருமாறு கருணாநிதி இடம் முறையிட்டுள்ளார். அதன் பின் எம்ஜிஆருக்காக கலைஞர் இந்த படத்திற்கு வசனம் எழுதிக் கொடுத்துள்ளார். அதை அடுத்து படத்தின் படப்பிடிப்புகள் விரைவாக துவங்கப்பட்டு சிறப்பாக முடிந்து படமும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த திரைப்படம் எம்ஜிஆரின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க வெற்றி படமாக அமைந்திருந்தது. நடிகர் சிவாஜியின் மூலமாக எம்ஜிஆர்க்கு கிடைத்த இந்த வாய்ப்பு அவரின் திரை வாழ்க்கைக்கு மேலும் ஒரு வெற்றி படிக்கட்டாக அமைந்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews