ரஜினிகாந்தின் போஸ்டர்களை கிழிக்க வைத்த எம் ஜி ஆர்! நடந்தது என்ன!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் அடுத்த இரண்டு, மூன்று மாதங்கள் ஓய்வெடுக்க இருப்பதாகவும் அதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171-வது திரைப்படத்தில் ரஜினி நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. லோகேஷ் மற்றும் ரஜினி கூட்டணியில் உருவாகும் படத்தின் பூஜை மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் துவங்கும் என்று சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. இதை தொடர்ந்து அடுத்தடுத்து இளம் இயக்குனர்களுடன் ரஜினி கைகோர்த்து படங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

இன்றைய தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என பிரபலத்தின் உச்சத்தில் ஜொலிக்கும் ரஜினிகாந்த் சினிமாவில் தொடக்க காலங்களில் பல தடைகளை தாண்டி வந்துள்ளார். தற்பொழுது அமைதியின் மறு உருவாக இருக்கும் நடிகர் ரஜினி வளர்ந்து வந்த காலகட்டங்களில் பல சர்ச்சைகளில் சிக்கி இருந்துள்ளார். குறிப்பாக தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி பல பிரச்சனைகளை சந்தித்து உள்ளார். நடிகை ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மோதல் மற்றும் ரஜினியின் வளர்ச்சி நடிகர் திலகம் எம்ஜிஆருக்கு பிடிக்கவில்லை எனவும் பல கிசுகிசுக்கள் பெரிதாக பரவி வந்தது.

மேலும் நடிகர் ரஜினிகாந்துக்கு சில தகாத பழக்க வழக்கங்கள் இருந்து வந்ததாகவும், அந்த பழக்கத்தினால் அவரது ரசிகர்களும் மிகவும் பாதிக்கப்பட்டு வந்ததாக பல செய்திகள் வெளியாகியிருந்தது. இந்த தகவல்கள் நடிகர் திலகம் எம்ஜிஆர் கவனத்திற்கு சென்றது. இதுவே நடிகர் எம்ஜிஆருக்கும், ரஜினிக்கும் இடையே ஒரு இடைவெளியை ஏற்படுத்த காரணமாக அமைந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி மீது நடிகர் திலகம் எம்ஜிஆர் மிகவும் கோபப்படும் படியான ஒரு சம்பவமும் நிகழ்ந்துள்ளது அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ரஜினிகாந்த் நடிப்பில் 1982 ஆம் ஆண்டு வெளியான படம் ரங்கா. அந்த சமயத்தில் எம்ஜிஆர் தான் முதலமைச்சராக இருந்துள்ளார். அப்போது அபிராமி திரையரங்கில் அன்னை அபிராமி என்ற ஸ்கிரீன் திறப்பு விழா நடந்திருக்கிறது. அதில் விழா தலைவராக எம்ஜிஆர் கலந்து கொண்டுள்ளார். அந்த சமயத்தில் சைதாப்பேட்டையில் இருந்து அண்ணா சாலை வரை இருபுறமும் ரங்கா படத்தில் ரஜினிகாந்த் ஒரு கையில் சிகரெட் மறுக்கையில் சரக்கு பாட்டிலோடு இருக்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கின்றன.

கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவியை ஓரம் கட்ட ஜெயலலிதாவை களம் இறக்கிய எம்ஜிஆர்!

அதைப் பார்த்த எம்.ஜி.ஆருக்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின் விழாவில் பேசிய எம் ஜி ஆர் அவர்கள் தற்போது இளைஞர்கள் எல்லாம் கெட்டுப் போய்விட்டார்கள், அனைவரது கையிலும் புகையும் மதுவும் இருக்கிறது. சினிமாக்காரர்களும் அதன் வீரியம் தெரியாமல் மது, புகையுடன் நடித்து வருகிறார்கள். நான் எல்லாம் அப்படி நடித்ததே இல்லை. இதெல்லாம் உடனடியாக மாற வேண்டும் என டென்ஷனாக பேசியிருக்கிறார் மக்கள் திலகம் எம்ஜிஆர்.

இந்த நேரத்தில் எம்ஜிஆர் ரஜினிகாந்த் மீது கோபப்பட்டு பேசினார் என்பது காட்டுத் தீ போல பரவ ஆரம்பித்துவிட்டது. இதை தெரிந்த ரஜினிகாந்த நம் மீது தவறு இருக்கின்றது. அதனால் தான் எம்ஜிஆர் அவர்கள் நம் மீது கோபப்பட்டு பேசியிருக்கிறார். ரங்கா படத்தில் குடிகாரன் கதாபாத்திரத்தில் நடித்தது கூட தவறில்லை. ஆனால் அப்படிப்பட்ட சுவரொட்டிகளை பொது வெளியில் ஒட்டுவதற்கு நாம் அனுமதி கொடுத்தது தான் தவறு என்று ரஜினிகாந்த் புரிந்துகொண்டு அனைத்து சுவரொட்டிகளையும் அங்கிருந்து அகற்றும்படி படக்குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதன்படி அந்த அனைத்து போஸ்டர்களும் உடனடியாக கிழிக்கப்பட்டுள்ளது.

Published by
Velmurugan

Recent Posts