நீங்க செய்றது உங்களுக்கே நல்லா இருக்கா? ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநரைப் பார்த்து பலமாகச் சிரித்த எம்.ஜி.ஆர்..

தமிழ் சினிமாவில் பிரபல இரட்டை இயக்குநர்களாக வலம் வந்து மாபெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்கள் பழம்பெரும் இயக்குநர்கள் கிருஷ்ணன்-பஞ்சு. நடிகர் திலகத்தின் திறமையை உலகம் அறியச் செய்தவர்கள். ஆம் பராசக்தி படத்தில் முதன் முதலாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அறிமுகப்படுத்திய பெருமை இவர்களையே சாரும். தொடர்ந்து சமூகக் கருத்துக்களை  வித்திட்ட பல படங்களை இயக்கினர். சிவாஜி, எம்.ஜி.ஆர் உள்ளிட்டோரை இயக்கி வெற்றி கண்டவர்கள்.

இவர்கள் செட்டில் வந்தாலே தானாகவே அனைத்து கலைஞர்களும் எழுந்து நின்று மரியாதை கொடுப்பர். அந்த அளவிற்கு தன்னுடைய பட யூனிட்டை கட்டுக் கோப்பாகவும், திறம்படவும் நடத்தி வந்தனர். தமிழ் சினிமாவில் என்றென்றும் பேசப்படும் காவியங்களான பராசக்தி, இரத்தக்கண்ணீர், சர்வர் சுந்தரம், உயர்ந்த மனிதன், எங்கள் தங்கம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்து அந்தக் காலத்தில்முன்னணி இயக்குநர்களாகத் திகழ்ந்தனர்.

இந்நிலையில் இவர்கள் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பில் 1966-ல் வெளிவந்த திரைப்படம் தான் பெற்றால் தான் பிள்ளையா? இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இயக்குநர் கிருஷ்ணன் அவர்களுக்கு வித்யாசமான அனுபவம் ஏற்பட்டிருக்கிறது.

அதாவது இவர்கள் செட்டில் நுழைந்தாலே மரியாதை நிமித்தமாக படக்குழுவினர் எழுந்து நிற்பது வழக்கம். இந்நிலையில் அந்த  பட ஷுட்டிங்கின் போது அப்போது மக்கள் திலகம்  எம்.ஜி.ஆர் அவர்கள் செட்டில் நுழைந்திருக்கிறார். எம்.ஜி.ஆரைக் கண்டதும் மொத்த யூனிட்டே மரியாதை நிமித்தமாக எழுந்து நிற்க, இதைக் கவனித்த இயக்குநர் கிருஷ்ணன் எழுந்து நிற்பதா? வேண்டாமா என்ற யோசனையில் மெதுவாக எழுந்து நின்றார்.

சிவ தாண்டவம் நடனம் ஆடி அப்பவே ரசிகர்களை கட்டிப்போட்ட மக்கள் திலகம்.. திறமையால் அடுத்தடுத்து கிட்டிய வாய்ப்பு

இதைக் கவனித்த எம்.ஜி.ஆர். கிருஷ்ணனை நோக்கி கோபமாய் இது உங்களுக்கு நன்றாக இருக்கிறதா என்று கேட்டாராம். எம்.ஜி.ஆர். இவ்வாறு கேட்டதைத் தொடர்ந்து யூனிட்டில் பரபரப்பு பற்றிக் கொள்ள என்ன நடந்தது என்று அனைவரும் யோசித்துக் கொண்டிருக்க இயக்குநர் கிருஷ்ணனோ எனக்கு மரியாதை கொடுக்கத்தான் நானே எழுந்து நின்றேன் என்று சொல்ல எம்.ஜி.ஆர் பலமாகச் சிரித்து விட்டாராம்.

எம்.ஜி.ஆர் இந்த அளவிற்கு இயக்கநர் கிருஷ்ணன் மேல் மரியாதை கொள்ளக் காரணம் அவரின் முதல்படமான சதிலீலாவதியில் கிருஷ்ணன் துணை இயக்குநராகப் பணியாற்றி இருந்தாராம். அப்பொழுதே இவர்களின் நட்பு ஆரம்பமாகியிருக்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...