பாக்ஸிங் போட வந்தவருக்கு எம்.ஜி.ஆர். வைத்த ராஜ விருந்து…முகமது அலி vs எம்.ஜி.ஆர் சந்திப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி எவ்வளவு தீவிர கிரிக்கெட் ரசிகராக இருந்தார் என்று அனைவருக்கும் தெரியும். தல தோனியின் தீவிர ரசிகராக இருந்தவர். அதேபோல் தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும். விளையாட்டின் மேல் அலாதி பற்றுக் கொண்ட எம்.ஜி.ஆர் ஒருமுறை பாக்சிங் விளையாட்டின் பிதாமகன் என்று போற்றப்படும் முகமது அலியும் ஒரே மேடையில் சந்தித்துக் கொண்ட அதிசயம் நடந்திருக்கிறது. அது 1980-ம் வருடம் தான். தமிழ்நாடு அமெச்சூர் பாக்ஸர்கள் சங்கம் நிதி திரட்டுவதற்காக உலக சாம்பியன் முகமது அலியை வேடிக்கை குத்துச் சண்டைப் போட்டிக்காக அழைத்து வந்திருக்கின்றனர்.

அப்போது சென்னை கன்னிமாரா சொகுசு ஹோட்டலில் முகமது அலி தங்கியிருந்தார். மேலும் முகமது அலி, முன்னாள் ஹெவி வெயிட் சாம்பியன் ஜிம்மி எல்லீஸ் உள்ளிட்டோர் பங்கேற்பது குறித்த விளம்பரங்களும் அப்போது இடம்பெற்றதால் தமிழ்நாடே இருவர் மோதலையும் கண்டு களிக்க தயாராக இருந்தது.

அடின்னா அடி என்னா அடி… கேப்டனோட அறைல ராதிகாவுக்கு காதே கேட்கலயாம்… அப்படி என்னதான் நடந்துச்சு…?

முகமது அலி விமான நிலையம் வந்திறங்கிய போது தலைநகரமே ஆர்ப்பரித்தது. அன்பான ரசிகர்களால் பூரித்துப் போன முகமது அலி சென்னை நேரு ஸ்டேடியம் வந்தடைந்தார். தங்களது கனவு நாயகன் முகமது அலியைக் கண்டவுடன் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களால் அரங்கமே குலுங்கியது. தமிழர்களின் பாசத்தால் திக்குமுக்காடிப் போன முகமது அலி வேடிக்கை குத்து சண்டையில் முன்னாள் ஹெவி வெயிட் சாம்பியனான ஜிம்மி எல்லீஸ் உடன் மோதினார். இவர்கள் இருவரும் மோதும் போட்டியை அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் துவக்கி வைத்தார்.

மூன்று ஜாம்வான்களையும் மேடையில் கண்டவுடன் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். அரங்கமே அதிர்ந்தது. நிதிக்காக டிக்கெட் கட்டணமாக ரூ.100, 70, 50, 20, 10 ஆகிய முறைகளில் பெறப்பட்டது. மேலும் இந்தப் போட்டியில் பலருடன் முகமது அலி வேடிக்கையாக மோதினார். கடைசியாக பத்துவயது சிறுவன் மேடை ஏறினான். அவனுக்கு போக்குகாட்டும் விதமாக துள்ளிக்குதித்தபடி மேடையை சுற்றிச்சுற்றிவந்த பின்னர், அவனை தனது முகத்தில் குத்துமாறு கூறிய முகமது அலி, அவனது உயரத்துக்கு தக்கவாறு முழங்காலிட்டு அமர்ந்தார்.

சிகப்பு ரோஜாக்கள் படத்தில் தவறாக சீன் எடுத்த பாரதிராஜா.. மூடி மறைத்து ஹிட் கொடுத்த ரகசியம்

பின்னர் எம்.ஜி.ஆர் தனது ராமாவரம் தோட்டத்திற்கு விருந்திற்கு முகமது அலியை அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு தடபுடல் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜானகி அம்மையாரின் மேற்பார்வையில் வஞ்சிரம் மீன் வறுவல், வெள்ளை சாதம், மீன் குழம்பு, வேகவைத்த முட்டை குழம்பு, இறால் ஃப்ரை, சிக்கன் வறுவல், உடன் பாயாசம் என விதவிதமான உணவுவகைகள் அன்று முகமது அலி தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது.

எம்.ஜி.ஆரின் விருந்தோம்பல் பற்றி முகமது அலி, ‘எனக்கு உலகில் எங்கு சென்றாலும் விதவிதமான உணவைத்தர ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால் அது என்னைக்கவர்வதற்கானதாக இருக்கும். நீங்கள் அளித்த உணவில் சுவையை விட கூடுதலாக இருந்தது உங்கள் அன்புதான்’ என்று நெகிழ்வாக கூற, எம்.ஜி.ஆர் நெகிழ்ந்து போனாராம். முகமது அலியின் சென்னை விசிட் நெகிழ்ச்சி மிகுந்ததாக அமைந்திருந்தது.

Published by
John

Recent Posts