இசையமைப்பாளரின் காதலுக்கு வந்த கடும் எதிர்ப்பு.. மணக்கோலத்தில் வந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த எம்.ஜி.ஆர்

தமிழ் சினிமாவில் இரட்டை இசையமைப்பாளர்களாக கால் நூற்றாண்டுக்கும் மேல் ஆட்சி செய்தவர்கள் எம்.எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி. இவர்கள் கூட்டணிக்குப் பிறகு மீண்டும் ஓர் இரட்டை இசையமைப்பாளர்கள் உருவாயினர் அவர்தான் சங்கர்-கணேஷ். கன்னிப்பருவத்திலே படத்தில் பட்டுவண்ண ரோசாவாம் பார்த்த கண்ணு மூடாதாம்…பாடலை இப்போது கேட்டாலும் நம்மை மெய்மறக்கச் செய்யும். இதுபோன்ற பல ஹிட் பாடல்களை உருவாக்கி 1970-80 களில் மிக பிஸியான இசையமைப்பாளர்களாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய சினிமாக்களில் 200 படங்களுக்கு  மேல் இசையமைத்துள்ளனர்.

சிறுவயதிலிருந்தே இசை ஆர்வம் கொண்ட கணேசை எம்.எஸ்.விஸ்வநாதன் தனது குழுவில் சேர்த்து கணேஷ_க்கு கம்போசிங் இன்சார்ஜ் பணியைக் கொடுத்தார் எம்எஸ்வி. முதலில் சங்கரும், கணேசும் ஒன்றாகத் தான் வேலையைத் தேடினார்கள். எம்.எஸ்.விஸ்வநாதனிடம் கணேஷ் சேர்ந்த மாதிரி, ஜி.கே.வெங்கடேஷிடம் சங்கர் சேர்ந்தார். 1964ல் இருவரும் தனித்தனியாக வேலை செய்தனர். அடுத்த ஆண்டில் இருவருமே எம்.எஸ்.விஸ்வநாதனிடம் வேலைக்கு சேர்ந்தனர்.

கமலின் பேரனாக நடித்த அல்லு அர்ஜுன்.. 40 வருடத்திற்கு முன்பே கண்கலங்க வைத்த நடிப்பு..

படிப்படியாக இசையமைப்பாளர் நிலைக்கு உயர்ந்து பின்னர் எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில் ஜெயலலிதா, ரவிச்சந்திரன் நடித்த மகராசி படத்தில் இவர்கள் இசையமைப்பாளர்களாக அறிமுகமானார்கள். அப்படம் வெற்றியைக் கொடுக்கவே தொடர்ந்து பல படங்களில் இசையமைக்கும் வாய்ப்பு கிட்டியது. தேவரின் ஆட்டுக்கார அலமேலு என்ற படம் இவர்களை பட்டி தொட்டி எங்கும் கொண்டு போய் சேர்த்தது. அப்போது மக்கள் திலகம் எம்ஜிஆர் படத்திற்கும் இசையமைக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அந்தப் படம்தான் நான் ஏன் பிறந்தேன்.

அப்போது பதிபக்தி, பாலும் பழமும், பாகப்பிரிவினை, பாத காணிக்கை, பஞ்சவர்ணக்கிளி, குடியிருந்த கோயில், நாணல் ஆகிய படங்களைத் தயாரித்தவர் ஜி என் வேலுமணி. இவரது மகனும் கணேசும் நல்ல நண்பர்கள். ஜி என் வேலுமணி வீட்டிற்குச் செல்லும் போதெல்லாம் இவரது மகள் சந்திரிகாவைப் பார்க்கும் வாய்ப்பு கணேசுக்குக் கிடைத்தது. பின்னர் அது காதலாக மாறி பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் கல்யாணத்தில் முடிந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிய மூச்சு.. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உயிர் போகும் தருவாயில் உடனிருந்தவர் இவரா..!

மணக்கோலத்தில் வந்து நின்ற தம்பதிகளுக்கு எம்ஜிஆரும், சிவாஜியும் விருந்து கொடுத்தனர். அப்போது ராமாவரத்தில் உள்ள எம்ஜிஆர் வீட்டில் சாப்பிடும்போது “என் வீட்டில் போய் இரு“ என தனது நுங்கம்பாக்கம் உள்ள வீட்டின் சாவியை கணேஷிடம் கொடுத்தார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அப்போது எம்.ஜி.ஆரின் இந்த குணத்தை எண்ணி அகமகிழ்ந்து நன்றி தெரிவித்தார்.

அதன்பின் இயக்குனர் ஏ.எஸ்.பிரகாசம், ஜூடோ ரத்னம் ஆகியோர் ஒத்தையடி பாதையிலே படத்தில் கதாநாயகனாக கணேசை நடிக்க வைத்தனர். தொடர்ந்து புகுந்த வீடு, நீ ஒரு மகாராணி, தேவியின் திருவிளையாடல், நீதியின் மறுபக்கம், நான் பாடும் பாடல், நெஞ்சமெல்லாம் நீயே என 7 படங்களில் நடித்து முடித்தார். தொடர்ந்து நடிக்க மனைவி சம்மதம் தெரிவிக்காததால் இசையை மட்டுமே கவனித்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...