மீனம் சனி பெயர்ச்சி ராசி பலன் 2023-2024!

மீன ராசி அன்பர்களே சனி பெயர்ச்சியினைப் பொறுத்தரை சனி பகவான் 12 ஆம் வீட்டில் இட அமர்வு செய்கின்றார். ஏழரைச் சனி ஆரம்பிக்க உள்ளதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஏழரை சனி காலத்தில் மிகவும் உஷாராகச் செயல்படுங்கள்.

தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். கடன்களை வாங்கி தேவையற்ற முதலீடுகளைச் செய்யக் கூடாது. வரவுக்கேற்ற செலவினை மட்டும் செய்யவும்; ஆடம்பரச் செலவுகள் உங்களைப் பல நெருக்கடிகளுக்குள் தள்ளும்.

மேலும் திருமண காரியங்களை ஏழரைச் சனி காலத்தில் செய்யலாமா? என்று யோசிக்காதீர்கள். வரன் அமையும் பட்சத்தில் தாராளமாக திருமண காரியங்களை நடத்தலாம்.

திருமணத்திற்குப் பின் வாழ்க்கையில் சில சிறப்பான மாற்றங்களையும் எதிர்பார்க்கலாம். பெற்றோர், பெரியோர்களின் ஆசி உங்களுக்கு கிடைக்கப் பெறும். பூர்விகத்தில் இருந்த சொத்துப் பிரச்சினைகள் சரியாகும்.

தொழில் வாழ்க்கை என்று கொண்டால் தொழில் நிமித்தமாக நஷ்டத்தில் இருந்து மீள்வீர்கள். கொடுத்த வாக்கினை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று எண்ணிச் செயல்பட்டு வாக்கினைக் காப்பாற்றவும் செய்வீர்கள்.

ஒருமுறை குருவாயூர் சென்று வருவது மிகவும் விசேஷமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வேலைவாய்ப்புரீதியாக மாற்றங்கள் எதையும் பெரிதளவில் எதிர்பார்க்காதீர்கள். இருக்கும் வேலை சிறப்பாக இருக்கும்பட்சத்தில் இந்த வேலையிலேயே சில காலங்களுக்குத் தொடரவும்.

வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்கள் எதையும் செய்யாதீர்கள். பொது இடங்களில் பேசுகையில் சிறிது கவனமாகப் பேசுங்கள். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. கூடா நட்பு கேடு விளைவிக்கும் என்பது போல் உங்கள் வாழ்க்கை ஆகிவிடும்.

சனி பகவான் உங்களுக்கு அனுபவத்தினைக் கொடுக்கப் போகிறார்; அனுபவங்களை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள். இந்த அனுபவங்கள் எதிர்காலத்தில் உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற பெரும் கற்றலாய் இருக்கும்.

2024 உங்களுக்கு எப்படி இருக்கும்? புத்தாண்டு பலன்கள் இதோ!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.