மீனம் மே மாத ராசி பலன் 2023!

மீன ராசியினைப் பொறுத்தவரை மே மாதத்தில் குரு – சூர்யன் – புதன் என நான்கு கிரகங்களும் 2 ஆம் இடத்தில் உள்ளது. சுக்கிரன் 4ஆம் இடத்திலும், செவ்வாய் பகவான் 5ஆம் இடத்தில் நீச்சம் பெற்றும் இட அமர்வு செய்துள்ளனர்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை ஏழரைச் சனி காலத்தில் பெரிய அளவிலான இடையூறுகள் மற்றும் பிரச்சினைகளைச் சந்தித்து இருப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளில் தாமதங்கள் இருக்கும். புது முயற்சிகளை முடிந்தளவு தவிர்த்து, இருக்கும் இடத்தினைத் தக்கவைத்துக் கொள்ளுதல் நல்லது.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை வரன்கள் கைகூடி வந்தாலும், ஏழரைச் சனி காலம் என்பதால் பலரும் வரன் குறித்து எதிர்மறையான விஷயங்களைக் கூறுவர்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை மிகவும் அன்பான- அமைதியான தம்பதியினர் இடையேயும் பெரிய அளவிலான வாக்குவாதங்கள், பிரச்சினைகள் ஏற்படும். தந்தைவழி உறவினர்களால் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படும்.

இதையும் படியுங்கள்: சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

பொருளாதார ரீதியாக கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சுப செலவுகளாக வீடு கட்டுதல், கட்டிய வீட்டைப் புதுப்பிதல், வாடகைக்கு வேறு ஒருவீட்டிற்கு மாறுதல் என்பது போன்ற விஷயங்கள் நடக்கப்பெறும்.

இதையும் படியுங்கள்: உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

மாணவர்களைப் பொறுத்தவரை உயர்கல்வி சார்ந்து வெளியூர், வெளிநாடு செல்ல நினைப்போருக்கு அதற்கான வாய்ப்புகள் அமையப் பெறும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews