மீனம் ஜூலை மாத ராசி பலன் 2023!

மீன ராசி அன்பர்களே ஜூலை மாதத்தினைப் பொறுத்தவரை வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை மாற்றங்களை எதிர்நோக்கி எந்தவொரு முயற்சியினையும் செய்ய வேண்டாம்.

புது வேலைக்கு முயற்சிக்கும் எண்ணம் இருந்தால் அதை அப்படியே தூக்கி ஓரமாக வைத்துவிட்டு இருக்கும் வேலையினைத் தக்க வைத்துக் கொள்ளவும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

மேல் அதிகாரிகளுடன் தேவையற்ற பேச்சுகள், வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை சார்ந்த விஷயங்களில் தாமதம் ஏற்படும்.

தொழில் சார்ந்த விஷயங்களில் வாடிக்கையாளர்கள் குறைவர்; புது முதலீடுகள் எதுவும் செய்ய வேண்டாம். தொழிலில் மந்தநிலை தொடரும்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையே தேவையில்லாத சண்டைகள் ஏற்படும். மூன்றாம் நபர்களின் தலையீட்டைக் குடும்பத்தில் தவிர்க்கவும்.

வக்ர சனி மற்றும் செவ்வாயின் பார்வை உங்களுக்குச் சாதகமானதாக இல்லை; குழந்தைகள் ரீதியாக வீண் விரயச் செலவுகள் ஏற்படும்.

மாணவர்களைப் பொறுத்தவரை கல்விரீதியாக பின் தங்கியே காணப்படுவர். கவனச் சிதறல் ஏற்படும். பெற்றோர் மற்றும் வீட்டில் உள்ள பெரியோர் பேச்சினைக் கேட்காமல் பிள்ளைகள் நடந்து கொள்வர்.

பொருளாதாரரீதியாக வரவினைக் காட்டிலும் செலவு மிக அதிகமாகவே உள்ளது. முடிந்தளவு தேவையான விஷயங்களில் பணத்தினைச் செலவழித்து ஆதாயச் செலவுகளாக மாற்றிவிடுங்கள்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

திருமண காரியங்களைப் பொறுத்தவரை சிறு சிறு தடங்கல்கள் இருக்கும். வரன் அமைந்தாலும் அது திருப்திகரமானதாக இருக்காது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews