ஆன்மீகம்

ஏழாவது படை வீடா மருதமலை

முருகனுக்குரிய ஆறுபடை வீடுகள்தான் அனைவருக்கும் தெரியும் ஆனால் முருகனுக்காகவே வாழ்ந்து முருகனிடம் தான் ஒரு முருகனின் நண்பர் போல் எண்ண அலைகளால் பேசி கடவுளான முருகப்பெருமானின் நண்பர் போலவே வாழ்ந்தவர் காலஞ்சென்ற திரைப்பட தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர்.

அந்தக்காலத்தில் புகழ்பெற்ற மருதமலை கோவிலுக்கு செல்ல சரியான பாதை வசதிகள் எல்லாம் இல்லை மின்சார வசதிகள் எல்லாம் இல்லாத காலம். தேவர் தன் சொந்த முயற்சியால் அருகில் உள்ள கல்வீரன் பாளையத்தில் இருந்து மருதமலைக்கு மின்சார இணைப்பு வாங்கி அந்த கோவிலுக்கு மின்சார வசதியை ஏற்படுத்தி கொடுத்தவர்.

சின்னப்பா தேவரின் வளர்ச்சிக்கு பெருமளவு காரணம் தான் வணங்கும் முருகன் என்பது தான் அவரின் எண்ணம் அதனால் முருகன் கோவில்களுக்கு அதிகம் செய்துள்ளார் சின்னப்பா தேவர் குறிப்பாக மருதமலை அவரை மிகவும் முன்னேற்றிவிட்ட சொந்த ஊர் கோவில் ஆகும். அதனால் சஷ்டி, கிருத்திகை என எந்த நாள் வந்தாலும் சாண்டோ சின்னப்பா தேவரை  அந்த காலங்களில்அங்கு பார்க்கலாம்.

தனது தெய்வம் படத்தில் ஆறுபடை வீடுகளின் அற்புதங்களை உள்ளடக்கி படம் தயாரித்திருப்பார். இவரின் எண்ணம் ஏழாவது படை வீடாக மருதமலையை ஆக்கிவிட வேண்டும் என்று அதனால் மருதமலை முருகனின் மீது தனக்குள்ள பக்தியின் அதீத வெளிப்பாடால் அவர் தயாரித்த தெய்வம் படத்தில் அறுபடைவீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலையை தவிர்த்துவிட்டு மருதமலையை காண்பித்திருப்பார்.

தேவர் இம்மண்ணுலகை விட்டு மறைந்தாலும் இன்றும் முருகனுக்குரிய பெருமை மிகு தலமான மருதமலைக்காக தேவரின் நற்பணிகள் வியக்க வைக்கின்றன.

 

Published by
Abiram A

Recent Posts