மார்க் ஆண்டனி விமர்சனம்: போட்டி போட்டு மிரட்டும் விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா!

திரிஷா இல்லைன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகிரா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இனிமேல் அடல்ட் ஒன்லி படங்களை எடுக்கவே மாட்டேன் என்கிற முடிவுக்கு வந்த நிலையில் விஷாலை வைத்து மார்க் ஆண்டனி படத்தை கொடுத்துள்ளார்.

இந்தப் படத்தில் விஷாலுக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யா வழக்கம்போல தனது வெர்சடைல் ஆன நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தியேட்டரில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்.

மார்க் ஆண்டனி விமர்சனம்:

இந்தப் படத்தின் ஹீரோ விஷாலா அல்லது எஸ்.ஜே சூர்யாவா என குழம்பும் அளவுக்கு ரசிகர்களின் மனதை கவர்ந்து விடுகிறார் எஸ்ஜே சூர்யா. மார்க் கண்டனின் படத்தின் கதை என்னவென்று பார்த்தால், மெக்கானிக்காக வளம் வரும் மார்க் தனது அப்பா ஆண்டனியால் ஏற்பட்ட மனவேதனை காரணமாக வாழ்நாள் முழுவதும் தவித்து வருகிறார்.

அவருக்கு டைம் டிராவல் செய்யக்கூடிய டெலிபோன் ஒன்று கிடைக்கும் நிலையில், தனது அப்பாவை எப்படி பழிவாங்க செல்கிறார். ஆனால் உண்மையிலேயே தனது அப்பா வில்லனா? இல்லை அங்கே ட்விஸ்ட் இருக்கிறதா? எஸ் ஜே சூர்யா இந்த கதையில் என்ன செய்கிறார், அவரும் எப்படி டைம் டிராவல் செய்கிறார். டைம் டிராவல் டெலிபோனை கண்டுபிடித்த சிரஞ்சீவி செல்வராகவனுக்கு என்ன ஆனது என ஏகப்பட்ட சுவாரசியங்களை திரைக்கதையில் புகுத்தி 2:30 மணி நேரம் ரசிகர்களை எண்டர்டெயின் செய்துள்ளார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.

சபாஷ் சரியான போட்டி:

ஜிவி பிரகாஷின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக மாறியுள்ளது. அந்த அனகோண்டா போர்ஷன் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பாடலை பயன்படுத்திய விதம் பக்கா.

எஸ் ஜே சூர்யாவுக்கு போட்டி போட்டு நடிகர் விஷாலும் விதவிதமான கெட்டப்புகளில் வந்து பார்த்தவுடனே சிரிக்க வைத்து விடுகிறார். அதிலும் கிளைமாக்ஸில் வரும் அந்த மொட்டை தலை கெட்டப் எல்லாம் மரண மாஸ் என்று தான் சொல்ல வேண்டும்.

பைசா வசூல்:

நடிகர் விஷால் தொடர்ந்து ஆறு தோல்வி படங்களை கொடுத்து வந்த நிலையில் அதிரடியாக மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி விடுவார் என்றே தெரிகிறது.

தயாரிப்பாளர் சங்கம் நடிகர் விஷால், தனுஷ், சிம்பு மற்றும் அதர்வா உள்ளிட்ட நடிகர்களுக்கு ரெட் கார்ட் தடை விதிக்கப்பட உள்ள நிலையில், தனது மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மூலம் தியேட்டர் ஓனவர்களை சந்தோசப்படுத்த போகிறார் விஷால் என்பது குறிப்பிடத்தக்கது.

லைகா தொடுத்துள்ள வழக்குகளையும் முடித்து விட்டு, அந்த துப்பறிவாளன் 2 படத்தையும் தொடர்ந்து இதே போல பொழுதுபோக்கு படங்களையும் விஷால் கொடுத்து வந்தால் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...