ஆன்மீகம்

மார்கழி மாத கிரிவலம் ரத்து

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக போற்றக்கூடியது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி என்று அழைக்க கூடிய திருவண்ணாமலையில் வாழ்ந்த மகான்கள் ஏராளம்.

இன்றும் கூட பல மஹான்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இங்கு வாழ்ந்து பல அற்புதங்களை மகான்கள் நிகழ்த்தியுள்ளனர்.

இங்குள்ள அண்ணாமலையாரை வணங்கி மலையே சிவமாக இருக்க கூடிய  இந்த புகழ்பெற்ற அண்ணாமலையில் 24 மணி நேரமும் கிரிவலம் செய்வது நல்லது.

அதுவும் பெளர்ணமி நாட்களில் இங்கு நல்ல அதிர்வலைகளை உணர முடியும் உடலுக்கும் மனதுக்கும் நல்லது பெளர்ணமி அன்று கிரிவலம் செய்து வழிபட்டால் நினைத்தவை நடக்கும் என்பதாலும் இங்கு அதிக அளவு மக்கள் கூட்டம் குவிவதை காணலாம்.

கடந்த சில வருடங்களாக கொரோனா பாதிப்பால் அவ்வப்போது கிரிவலம் ரத்து செய்யப்பட்டு வருகிறது. ஏனென்றால் இங்கு மக்கள் லட்சக்கணக்கில் ஒவ்வொரு பெளர்ணமிக்கும் கூடுவர் என்பதால் இரண்டு வருடங்களாகவே பல்வேறு பெளர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்பட்டு வருகிறது அந்த அடிப்படையில் இந்த மார்கழி மாத கிரிவலமும் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

Published by
Abiram A

Recent Posts