லியோ ஃபிளாஷ்பேக் போல.. என் பேட்டியும் ஃபேக் தான்!.. திரிஷாவை தப்பா சொல்லல.. மன்சூர் அலி கான் விளக்கம்!

சரக்கு படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் வழக்கம் போல தேவையில்லாமல் வாய் விட்டு மாட்டிக் கொண்டுள்ளார் நடிகர் மன்சூர் அலி கான். லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் மிகப்பெரிய கதாபாத்திரத்தை மன்சூர் அலி கானுக்கு கொடுக்க, பலரும் தற்போது மீண்டும் மன்சூர் அலி கானை நடிக்க அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை திரிஷா பற்றி ஆபாசமான முறையில் அவர் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதற்கு நடிகை திரிஷாவும் தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்ய, லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதிரடியாக மன்சூர் அலி கானை கண்டித்து ஒரு போஸ்ட் போட்டிருந்தார்.

மன்சூர் அலி கான் விளக்கம்:

”அய்யா பெரியோர்களே திடீர்னு திரிஷாவை நான் தப்பா பேசிட்டேன்னு என் பொண்ணு பசங்க வந்த செய்திகளை அனுப்பிச்சாங்க. அடப்பாவிகளா, என் படம் ரிலீஸ் ஆகுற நேரத்துல. நான் வர்ற தேர்தல்ல ஒரு பிரபல கட்சி சார்பாக போட்டியிடறேன்னு சொன்ன வேளையில வேண்டுமென்றே நல்லா எவனோ கொம்பு சீவி விட்டு இருக்காங்க.

உண்மையில் அந்த பொண்ணஉயர்வாத்தான் சொல்லி இருப்பேன். அனுமாரு சிரஞ்சீவி மலைய கையிலே தூக்கிட்டு போன மாதிரி காஷ்மீர் கூட்டிட்டு போயிட்டு வானத்திலேயே திருப்பி கூட்டிட்டு வந்துட்டாங்க.

பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதுல இல்ல. ஆதங்கத்தை காமெடியா சொல்லி இருப்பேன். அதை கட் பண்ணி போட்டு கழகம் பண்ண நெனச்சா நான் என்ன இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்சரவா. திரிஷா கிட்ட தப்பா வீடியோவை காட்டி இருக்காங்க.

அய்யா என்கூட நடிச்சவங்க எல்லாம் எம்எல்ஏ எம்பி ஆகிட்டாங்க பல கதாநாயகிகள். பெரிய தொழில் அதிபர்கள் கட்டிக்கிட்டு செட்டில் ஆகிட்டாங்க. மேலும், லியோ பூஜைலயே என் பொண்ணு தில் ரூபா உங்க பெரிய ஃபேன்னுன்னு சொன்னேன். இன்னும் ரெண்டு பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ணனும்.

360 படங்கள்ல நடிச்சிருக்கேன். நான் எப்பவும் சக நடிகைகளுக்கு மரியாதை கொடுத்து பேசுறவன் எல்லாருக்கும் தெரியும். சிலர் சொம்பு தூக்கிகளோட பருப்பு எல்லாம் வேகாது. திரிஷா கிட்ட தப்பா கட் பண்ணி காமிச்சி கோபப்பட வச்சிருக்காங்கண்ணு தெரியுது. உலகத்தில் எத்தனையோ பிரச்சனை இருக்கு பொழப்பு பாருங்க அய்யா” என மன்சூர் அலி கான் தற்போது கடிதம் எழுதியுள்ளார்.

நடிகை திரிஷா தன்னை தவறாக எண்ண வேண்டாம் என்றும், தான் தப்பான அர்த்தத்தில் அப்படி பேசவில்லை என்றும் மன்சூர் அலி கான் விளக்கம் கொடுத்துள்ளார். முதலில் லியோ படத்தின் ஃபிளாஷ்பேக் ஃபேக்கு, இப்போ மன்சூர் அலி கான் பேசிய வீடியோவே ஃபேக் என உருட்டுகிறாரே என கலாய்த்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews