விஜய் பட நடிகைக்கு கல்யாணம்!.. அமர்க்களமாக அபர்ணா தாஸுக்கு நடந்த ஹல்தி ஃபங்க்ஷன்!..!

28 வயதாகும் இளம் நடிகை அபர்ணா தாஸ் திருமணம் ஏப்ரல் 24-ஆம் தேதியான நாளை நடைபெற உள்ளது. திருமணத்தை முன்னிட்டு நடைபெற்ற ஹல்தி நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தற்போது நடிகை அபர்ணா தாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

aparna2

அபர்ணா தாஸ் ஹல்தி கொண்டாட்டம்:

தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மலையாள நடிகை தான் அபர்ணா தாஸ். பீஸ்ட் படத்தில் நடித்த அபர்ணா தாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவரப்பட்ட நிலையில், கவினுக்கு ஜோடியாக டாடா படத்தில் கடந்த ஆண்டு நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது.

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஞான் பிரகாஷன் எனும் மலையாள படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் அபர்ணா தாஸ். அந்தப் படத்தை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு மனோகரம் என்னும் மலையாள படத்திலும் இவர் நடித்திருந்தார்.

Snapinsta.app 437952778 7380367085415531 2478300140438258901 n 1080

பீஸ்ட் மற்றும் டாடா நடிகை:

அதன் பின்னர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் படத்தில் நடித்து 202ம் ஆம் ஆண்டு கோலிவுட்டிலும் அறிமுகமானார். கடந்த ஆண்டு தெலுங்கில் ஆதிகேசவா எனும் படத்தின் மூலம் நடித்து அங்கேயும் அறிமுகமானார். சீக்ரெட் ஹோம் எனக்கு மலையாள படம் இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியானது.

மேலும் ஆனந்த் ஸ்ரீபாலா எனும் மலையாள படத்தில் இவர் நடித்துள்ளார். அந்த படம் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மஞ்சுமெல் பாய்ஸ் நடிகருடன் திருமணம்:

இந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், அந்த படத்தின் நடித்த தீபக் பரம்போலைத்தான் அபர்ணா தாஸ் நாளை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இந்நிலையில், நேற்று அவரது ஹல்தி நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் அதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.

மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் எனும் மலையாள படத்தில் கடந்த 2010ம் ஆண்டு நடித்து ஹீரோவாக மலையாளத்தில் அறிமுகமானவர் தீபக் பரம்போல். பரம்பொருள் தட்டத்தின் மரையத்து, திற, சிம், டி கம்பெனி, குஞ்சிராமாயணம், கேப்டன், இளையராஜா, ஹெவன், கிறிஸ்டோபர், காசர் கோல்ட், கன்னூர் ஸ்குவாட், மஞ்சுமெல் பாய்ஸ், வருஷங்களுக்கு விசேஷம் என பல சூப்பர் ஹிட் படங்களில் இவர் நடித்துள்ளார். இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ள நிலையில், கேரளா சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...